நீதிபதி திட்டியதால் நெஞ்சு வலி, சிகிச்சை பெற்று வரும் உதவி ஆய்வாளருக்கு ஆறுதல் தெரிவித்த இராமநாமபுரம் SP

Admin 1
0 0
Read Time3 Minute, 11 Second

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் வணிக குற்றப்புலனாய்வு பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் திருமதி.ஜெனிபா ராணி. இந்த வணிக குற்றப்புலனாய்வு பிரிவு சம்பந்தமான வழக்குகள் அனைத்தும் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அமைந்து உள்ள, குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் -1 என்ற நீதிமன்றத்தில் நடைபெறும்.

இந்த நீதிமன்றத்தில் நீதிபதியாக ஜெனிதா என்பவர் பணியாற்றி வருகின்றார். தங்களுடைய பிரிவின் கீழிலுள்ள வழக்கின் சம்பந்தமாக நீதிமன்ற பணிகளுக்காக நீதிமன்றத்தில் உதவி ஆய்வாளர் திருமதி.ஜெனிபா ராணி, திரு.கார்த்திக்கேயன் மற்றும் திரு.நசுரூதீன் உள்ளிட்ட காவல்துறையினர் நேற்று காலை 10 மணிக்கே ஆஜராகியுள்ளார்.

நீதிபதி தன் இருக்கைக்கு வந்த உடனே, ” உன்னை யார் என்னுடைய கோர்ட்க்கு வர சொன்னது.? உடனே நீ வெளியே போ என்று கூறியதோடு மட்டுமில்லாமல், அங்கு நீதிமன்றப் பணியில் இருந்த ஊழியர்கள் நான்கு பேரை அழைத்த நீதிபதி, “இவளை அப்படியே இழுத்து கீழே கொண்டு விடுங்கள்.” என உத்தரவிட்டார். அங்கேயே மயங்கி சரிந்த உதவி ஆய்வாளரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இது குறித்து காவல்துறை வட்டாரத்தில் வாட்ஸ் அப்-களில் வைரலாக பரவியது. மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டிருக்கும் பெண் உதவி ஆய்வாளரை, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரான திரு.வருண்குமார் நேரடியாக சந்தித்து ஆறுதலளித்து விசாரணையை தொடங்கியுள்ளார்.

என்ன காரணத்திற்காக இந்த விவகாரம்..? நீதிமன்ற வளாகத்தில் நடந்தது என்ன..? என்ற பல கேள்விகள் எழும்பிய நிலையில், வணிக குற்றப்புலனாய்வு பிரிவின் காவல் துணை கண்காணிப்பாளரான ராஜேஸ்வரியை வரவழைத்து விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகின்றார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். அதேவேளையில், பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வரும் பெண் உதவி ஆய்வாளரை சந்தித்து ஆறுதலளித்த காவல் கண்காணிப்பாளருக்கு காவல்துறையினர் நன்றி தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

ராமநாதபுரத்திலிருந்து
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “நீதிபதி திட்டியதால் நெஞ்சு வலி, சிகிச்சை பெற்று வரும் உதவி ஆய்வாளருக்கு ஆறுதல் தெரிவித்த இராமநாமபுரம் SP

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சென்னை புதுப்பேட்டையிலுள்ள குதிரைப்படை புதுப்பிக்கப்பட்ட நிர்வாக கட்டிடத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் திறந்து வைத்தார்.

227 சென்னை: கி.பி. 1800 ஆம் ஆண்டு சென்னை, புதுப்பேட்டையில் ஒரு கட்டிடம் குதிரைப்படைக்காக கட்டப்பட்டது. இக்கட்டிடத்தின் மேல் தளத்தில், குதிரைப்படையின் தலைமை அதிகாரிகள் இருப்பிடமாகவும், கீழ் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami