10 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

Admin

ஈரோடு : ஈரோடு மாவட்டம் வெள்ளிதிருப்பூர் அடுத்த மூங்கில் பாளையத்தில் கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்ட 7 பேரை வெள்ளித்திருப்பூர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். கடந்த 2009இல் ஜாமினில் வெளிவந்த நாகை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த ரவி 43 என்பவர், அதன்பிறகு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இவரைப் பிடிக்க ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு சக்தி கணேசன் ஐபிஎஸ் அவர்கள் தனிப்படை அமைத்தார்.

அதன்பேரில் வெள்ளித்திருப்பூர் போலீசார் சோதனை சாவடி அருகில் சுற்றி வளைத்து பிடித்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இதே வழக்கில் தலைமறைவாக இருந்த குரு மூர்த்தி என்பவரை சமீபத்தில் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

 

ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :

R.கிருஷ்ணமூர்த்தி
ஈரோடு மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா

N.செந்தில்குமார்
ஈரோடு மாவட்ட பொது செயலாளர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா

 

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் வாலிபருக்கு ஏழு ஆண்டுகள் சிறை

45 ஈரோடு : ஈரோடு, சத்தியமங்கலத்தை அடுத்துள்ள நல்லசாமி வீதியை சேர்ந்த அப்துல்லா இவருடைய மகன் சாரும் 24 கூலித் தொழிலாளியான இவர் கடந்த 21 2 2017 அவர் ஒரு வீட்டிற்கு சென்று தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். அந்த சிறுமி தனது பாட்டியிடம் தெரிவிக்கவே, அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரை கைது செய்யப்பட்டு […]

மேலும் செய்திகள்

error: Content is protected !!
Bitnami