94
Read Time1 Minute, 16 Second
நெல்லை : நெல்லை மாநகர பகுதியான நெல்லை நாகர்கோவில் சாலையில், மேலப்பாளையம் வாகன சோதனை சாவடி ரெட்டியார்பட்டி சாலை பேட்டை டவுன் உள்ளிட்ட சாலைகளில் நள்ளிரவு பயணிக்கும் வாகனங்களை நிறுத்தி, டிரைவர்களுக்கு முகம் கழுவ தண்ணீர் வழங்கி, பின்னர் டீ பிஸ்கட் வழங்கி சோர்வை நீக்கி பாதுகாப்பாக செல்லும் வகையில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆணையர் திரு சேகர் தலைமையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு ஐயப்பன் பாலசுப்பிரமணியன் மற்றும் காவலர் ரூபன் வாகன ஓட்டிகளுக்கு விபத்தின்றி பாதுகாப்பாக இயக்க வேண்டும் என்பன அறிவுரை வழங்கினர். இந்நடவடிக்கை வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
திருநெல்வேலியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜோசப் அருண் குமார்