சத்தியமங்கலம் சாலை விபத்தில் STF உதவி ஆய்வாளர் குடும்பத்துடன் பலி

Admin
0 0
Read Time2 Minute, 12 Second

ஈரோடு: காவல் குடும்பத்தைச் சேர்ந்த தமிழ்நாடு சிறப்பு இலக்கு படையைச் சேர்ந்த SI திருசெல்வம் செல்வம் அவர்களது மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் சாலை விபத்தில் சத்தியமங்கலம்  பண்ணாரி ரோடு வடவள்ளி என்னும் இடத்தில் சாலைவிபத்தில் அகால மரணம் அடைந்தார்கள்.

சத்தியமங்கலம் (சிறப்பு இலக்கு படை) STF தலைமையிடத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் திரு.செல்வம் அலுவல் நிமித்தம் சத்தியமங்கலம் சென்று தலைமையிட மெஸ்-க்கு தேவையான பொருட்கள் வாங்கி விட்டு, அவரது குடும்பத்தாருடன் STF கேம்ப் நோக்கி அவருக்கு சொந்தமான TN 91 B 3287 SUZUKI WAGANOR CAR-யில் திரும்பி வரும்பொழுது சத்தி TO பண்ணாரி சாலையில் புதுவடவள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் எதிரே வந்த  சோளம் ஏற்றி வந்த லாரி KA10 7282 டாரஸ் லாரி மோதியதில், சம்பவ இடத்தில் உதவி ஆய்வாளர் செல்வம் அவரது மனைவி தேவி மற்றும் அவரது குழந்தை ஜனனி ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர்.

மேலும் அவர்களுடன் உதவியாக வந்த திரு முருகேசன் என்பவருக்கும் காயம்பட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :

R.கிருஷ்ணமூர்த்தி
ஈரோடு மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா

N.செந்தில்குமார்
ஈரோடு மாவட்ட பொது செயலாளர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

விபத்தை தவிர்க்க வாகன ஓட்டிகளுக்கு நள்ளிரவில் டீ பிஸ்கட் வழங்கிய நெல்லை காவல்துறையினர்

146 நெல்லை : நெல்லை மாநகர பகுதியான நெல்லை நாகர்கோவில் சாலையில், மேலப்பாளையம் வாகன சோதனை சாவடி ரெட்டியார்பட்டி சாலை பேட்டை டவுன் உள்ளிட்ட சாலைகளில் நள்ளிரவு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami