தீரன் படபாணியில் சிறப்பாக புலன்விசாரணை செய்த அம்புத்தூர் காவல்துறையினருக்கு, ஆணையர் பாராட்டு

Admin
0 0
Read Time6 Minute, 22 Second

சென்னை : அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் வாலிபர் கொலை வழக்கில்  சம்பந்தப்பட்ட சிறுவன் உட்பட  2  குற்றவாளிகளை  வெளிமாநிலம் சென்று கைது  செய்த தனிப்படை போலீசாரை  சென்னை பெருநகர காவல் ஆணையாளர் A.K.விஸ்வநாதன்,IPS நேரில் அழைத்து பாராட்டினார்.

சென்னை, வியாசர்பாடி, பெரியார் நகர், திருவள்ளூர் தெருவை சேர்ந்த ஆனந்தன் மகன் பிரபாகரன் (வ/27) கடந்த 10 வருடங்களாக அம்பத்தூர், அத்திப்பட்டு  பகுதியில் ஓம் பிளாஸ்டிங் & கோட்டிங் என்ற பெயரில் இரும்பு வெல்டிங் செய்யும் கம்பெனியை நடத்தி வந்துள்ளார்.

கடந்த 22.11.2019 அன்று காலை வழக்கம் போல் கம்பெனிக்கு சென்றதாகவும், மாலை 4.30 மணியளவில் இரும்பு பொருட்களை கொண்டு வருவதற்காக லாரி ஓட்டுனர் மேற்படி பிரபாகரனை தொடர்பு கொண்டபோது அவர் போனை எடுக்காததால் அவரது தந்தை ஆனந்தன்  என்பவரை தொடர்பு கொண்டு உங்கள் மகன் போனை எடுக்கவில்லையென லாரி ஓட்டுனர் தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னர்  ஆனந்தனும் பிரபாகரனை தொடர்பு கொண்டபோது அவர் போனை எடுக்காததால் சந்தேகமடைந்த ஆனந்தன் இரவு கம்பெனிக்கு வந்து பார்த்தபோது கம்பெனி பூட்டியிருந்ததாகவும், கம்பெனியின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பிரபாகரன் இடது பக்க தலை, நெற்றி, மூக்கு ஆகிய இடங்களில் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து பிரபாகரனின் தந்தை ஆனந்தன் அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசாரின் விசாரணையில், கொலை சம்பவம் நடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்த வட மாநிலத்தை சேர்ந்த 2  நபர்கள் பிரபாகரனை கொலை செய்துவிட்டு பீகார் மாநிலத்திற்கு தப்பிச்சென்றது தெரியவந்தது.

தப்பி ஓடிய குற்றவாளிகளை பிடிக்க அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலைய ஆய்வாளர் ஆர்.விஜயராகவன் தலைமையில் , உதவி ஆய்வாளர் சையத்முபாரக், தலைமைக்காவலர்கள் சார்லஸ் அன்பழகன்,  சதீஷ், ஆகியோர் அடங்கிய தனிப்படையினர்  கடந்த 24.11.2019 அன்று  பீகார் மாநிலத்திற்கு விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டையில்  கடந்த 27.11.2019 அன்று பௌரித் கிராமத்தில் பதுங்கிருந்த ரவுசன்மாஞ்சி (வ/21)  மற்றும் 17 வயதுடைய இளஞ்சிறார் என குற்றவாளிகளை கைது செய்து சென்னை  அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

போலீசாரின் விசாரணையில் கடந்த 22.11.2019 அன்று காலை 11.30 மணியளவில்  கைது செய்யப்பட்ட ரவுசன்மாஞ்சி மற்றும் 17 வயதுடைய சிறுவன் வேலைக்கு சேர்ந்த 4 நாட்களிலே வேலையைவிட்டு விட்டு தங்களது சொந்த ஊருக்கு செல்வதாக கூறி உரிமையாளர் பிரபாகரனிடம் சம்பள  பணத்தை கேட்டுள்ளனர். அதற்கு பிராபகரன் வேலைக்கு சேர்ந்து நான்கு நாட்களில் எப்படி சம்பளத்தை தருவது தொடர்ந்து வேலை செய்யுங்கள் என கூறிவிட்டு தனது அறைக்கு சென்று ஓய்வு எடுக்க சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரவுசன்மாஞ்சி மற்றும் 17 வயதுடைய சிறுவன் ஆகிய இருவரும்  மதியம் பிரபாகரன் தூங்கி கொண்டிருந்த நேரத்தில் அவரது அறைக்கு சென்று  அருகில் கிடந்த இரும்பு பைப்பால் சரமாரியாக தாக்கிவிட்டு அவரது பையிலிருந்த ரூ.4,600/- மற்றும் 1 செல்போன் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பியுள்ளது விசாரணையில் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட இருவரையும்  ரவுசன்மாஞ்சி மற்றும் 17 வயதுடைய சிறுவன் ஆகிய இருவரையும் போலிசார் சிறையில் அடைத்தனர்.

இதில் சிறப்பாக விசாரணை செய்து வழக்கில் 2 குற்றவாளிகளை பீகார் மாநிலத்திற்கு சென்று கைது செய்த அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலைய ஆய்வாளர் ஆர்.விஜயராகவன்,  உதவி ஆய்வாளர் எம்.சையத் முபாரக், தலைமைக்காவலர்கள்  பி.சார்லஸ், எம்.அன்பழகன், பி.சதீஷ், ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஏ.கே.விஸ்வநாதன், அவர்கள் நேற்று  நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

சென்னை மாநகர காவல் ஆணையர் அவர்களிடம் நற்சான்றிதழ் பெற்றுள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் ஆய்வாளர் திரு விஜயராகவன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் பாராட்டுக்கள்.

 

 

நமது குடியுரிமை நிருபர்


S. வீரமணி
குடியுரிமை நிருபர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சத்தியமங்கலம் சாலை விபத்தில் STF உதவி ஆய்வாளர் குடும்பத்துடன் பலி

151 ஈரோடு: காவல் குடும்பத்தைச் சேர்ந்த தமிழ்நாடு சிறப்பு இலக்கு படையைச் சேர்ந்த SI திருசெல்வம் செல்வம் அவர்களது மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் சாலை விபத்தில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami