30 லட்சம் மதிப்பிலான பான் மசாலா குட்கா பொருட்களை பறிமுதல் செய்த கோவை காவல்துறையினர்

Admin
Read Time3 Second

கோவை : தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையிலும் கோவை மாநகரில் சமீபகாலமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து பான்மசாலா குட்கா பொருட்களை அதிக அளவில் விற்பனை செய்து வருகின்றனர். மேலும், இந்த குட்கா பொருட்கள், பயன்படுத்துபவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு வடிவங்களிலும் பல்வேறு சுவைகளிலும் தயாரிக்கப்பட்டு கவர்ச்சிகரமான பாக்கெட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கோவை மாநகரை பான் மசாலா குட்கா பொருட்கள் பயன்படுத்தாத நகரமாக மாற்ற மாநகர காவல் ஆணையாளர் திரு.சுமித் சரண், IPS உத்தரவின் பேரில், துணை ஆணையாளர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) திரு.பாலாஜி சரவணன் அவர்களின் தலைமையிலான தனிப்படை குழுவினர் பள்ளிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் மறைமுகமாக ரோந்து பணிகளை மேற்கொண்டு வந்தனர் .

இவ்வாறு கடந்த மாதம் மட்டும் நடைபெற்ற ரோந்து பணிகளின் மூலம் முப்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு , சுமார் ஒரு கோடி மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று 01-12-19 தேதி வெரட்டி ஹால் காவல் நிலைய சரக்கத்தில் அரசு தடை செய்யப்பட்ட பான் மசாலா விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் துணை ஆணையர் டாக்டர் திரு. பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையிலான மாநகர தனிப்படை போலீசார் மற்றும் வெரட்டி ஹால் கா .நி உதவிஆய்வாளர் தீவிர கண்காணிப்பின் போது மேலும் சுமார் 30 லட்சம் மதிப்பிலான பான் மசாலா குட்கா பொருட்களை பறிமுதல் செய்து குற்றவாளிகள் பிரமோத்குமார் (37) s/o ஜோகுஜி வினோத்குமார் (28) s/o ஜோகுஜி ஆகியோர் களை கைது செய்து நடவடிக்கைகள் மேற்கொல்லப்பட்டு வருகிறது.

 

 

கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்


A. கோகுல்

 

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருச்சியில் குண்டர் சட்டத்தில் 2 கைது

249 Share on Facebook Tweet it Share on Google Pin it Share it Email திருச்சி: திருச்சிராப்பள்ளி மாவட்டம், தொட்டியம் காவல் நிலைய […]

மேலும் செய்திகள்

Bitnami