வழிப்பறி கொள்ளையன் கைது, 5 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்த திருச்சி காவல்துறையினர்

Admin

திருச்சி: திருச்சி மாநகரம் கன்டோன்மெண்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 19ம் தேதி அலெக்ஸ்சான்ரியா ரோடு அருகே நடைப்பயிற்சியில் இருந்த மாரிக்கண்ணு என்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் 10 பவுன் மதிப்புள்ள தாலி செயினை அறுத்து சென்றதற்காக சென்றதாக அளித்த புகாரின் பேரில் கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது.

திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்படி, தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளி தேடப்பட்ட நிலையில், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராஜகோபால் என்பவரை பிடித்து விசாரணை செய்ததில், இவ்வழக்கு உட்பட மேலும் 3 வழக்குகளில் தொடர்புடையவர் என்பது தெரிய வந்த நிலையில், அவரது கைது செய்தனர்.

மேற்படி அவரிடம் இருந்து 5 லட்சம் மதிப்புள்ள 25 1/2 சவரன் நகையும் கைப்பற்றப்பட்டது .அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றவாளியை கைது செய்த காவல் அதிகாரிகளை, திருச்சி மாநகர காவல் ஆணையர் அ.அமல்ராஜ் வெகுவாக பாராட்டினார்.

 

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கோவையில் மாணவிகளுக்கு ஆபாச வீடியோ காட்டிய பள்ளி தாளாளர், 'போக்சோ' சட்டத்தில் கைது

104 கோவை: கோவை, காந்திபுரம், ஐந்தாவது வீதி விரிவாக்கம் பகுதியில், ‘புனித மரியன்னை’ அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, 400க்கும் மேற்பட்ட […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami