போக்சோ சட்டத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை ?

Admin
1 0
Read Time8 Minute, 24 Second

குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்டம் ஆன போக்சோ சட்டம் 2012 (Pocso – production of children from sexual offence) என்பது 18 வயது நிரம்பாத சிறுவர், சிறுமிகள் இருபாலரையும் குறிக்கும். இது குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டமாகும். இதனைச் சுறுக்கமாக போக்சோ சட்டம் அல்லது போக்ஸோ சட்டம் என அழைக்கப்படுகிறது. இச்சட்டம் , மாநிலங்களவையில் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 10ம்தேதியும், மக்களவையில் மே மாதம் 22ம் தேதியும் நிறைவேற்றப்பட்ட சட்டமாகும்.

18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச் சட்டத்தின் வரையறைக்குள் வருவர். அதாவது ஆண் குழந்தைகள், சிறுவர்களும் பாதிக்கப்பட்டாலும், இச்சட்டம் தலையீடு செய்யும். பாலியல் தாக்குதல்/வன்முறை, பாலியல் துன் புறுத்தல்/சீண்டல், ஆபாசப் படமெடுக்கக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது.

30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வருடத்துக்குள் வழக்கு முடிய வேண்டும். இது மிகத் தேவையானது. சாதாரண சிறை தண்டனையிலிருந்து, கடுங் காவல், ஆயுள் தண்டனை வரை கொடுக்க லாம் என சட்டம் குறிப்பிடுகிறது. சில வகை பாலியல் வன்முறைக்குக் கூடுதல் தண்டனை உண்டு.

உதாரணமாக, காவல் துறையினர், பாதுகாப்புப் படையினர், ராணுவம், அரசு அதிகாரிகள் போன்றவர்கள் பாதுகாவலர்கள் அல்லது நம்பிக்கைக் குரியவர்கள். அவர்களே குற்றம் இழைக்கும் போது, அதிக தண்டனை உண்டு என இச்சட்டம் தெளிவுபடுத்துகிறது.மாவட்ட அளவில் குழந்தை பாதுகாப்புப் பிரிவு அமைக்கப்பட வேண்டும். தனி காவல் துறை பிரிவும் ஏற்படுத்தப் பட வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தை எங்கு இருந்தால், அக்குழந்தையின் நலனுக்கு உகந்தது என்று பார்க்க வேண்டும். சில சமயம், குடும்ப உறுப்பினர்களே குற்றம் செய்பவராக இருந்தால், அங்கிருந்து குழந்தையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.

முக்கிய பிரிவுகள்

குற்றம் இழைத்தவர்கள் மட்டுமல்ல, குற்றத்தை செய்யும் நோக்கத்துடன் அதற்காக முயற்சித்தவர்களும் குற்றவாளிகள் தான். பாலியல் வன்முறை செய்ய, ஒரு சிறுமியை இழுத்துச் சென்றிருக்கலாம். யாரோ வருகிறார்கள் என்பதற்காக விட்டு விட்டு ஓடியிருக்கலாம்.

பணம் திருடினாளா என்று பரிசோதிக்கவே தனியாக அழைத்து வந்தேன் என்று ஆசிரியர் கூறலாம். வழக்கு வந்தால், குற்றம் நடக்கவில்லையே என்று தப்பித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆனால் இச்சட்டம், தப்பிக்கும் வழியை மிகச் சரியாக அடைக்கிறது. குற்றத்துக்கு என்ன தண்டனையோ, அதில் பாதியை குற்றம் செய்யும் நோக்கத்துடன் முயற்சிப்பவர்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறுகிறது.

மற்றொரு முக்கிய பிரிவு, பாலியல் வன் கொடுமை குற்றத்தைப் பொறுத்தமட்டில், குற்றம் நடந்தது என்று மனுதாரர் ப்ராசிகியூஷன் தரப்பு நிரூபிக்க வேண்டியதில்லை. குற்றவாளி தான், தான் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுவர், சிறுமியர் பெயரையும், அடையாளத்தையும், சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் ஊடகங்கள் வெளியிடக்கூடாது என்பது அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கிறது. காவல் துறையும் வெளியிடக் கூடாது என்பது தான் இதன் பொருள்.

இழப்பீடு/நிவாரணம்

சிறப்பு நீதிமன்றம் தாமாகவோ, அல்லது பாதிக்கப்பட்டோரின் மனுவின் அடிப்படையிலோ தேவையைப் பொறுத்து இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். இறுதியில், குற்றவாளி தண்டனை பெற்றாலும், விடுவிக் கப்பட்டாலும் நிவாரணம் வழங்கலாம்.

குற்ற வாளியை அடையாளம் காண முடியாவிட்டாலும், தலைமறைவாகப் போய் விட்டாலும் கூட, இழப்பீடு வழங்கலாம். உடல் காயம், மன உளைச்சல், மருத்துவச் செலவு, குடும்பத் தின் பொருளாதார நிலை ஆகியவற்றைக் கணக்கில் எடுக்க வேண்டும்.

மன/உடல் நிலை சரியில்லாமல் அல்லது விசாரணை, வழக்குக்குச் செல்வதற்காகப் பள்ளி செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் அதையும் கணக் கில் எடுக்க வேண்டும். எச்.ஐ.வி. தாக்கியிருந்தால், கர்ப்பமாகி விட்டால், ஊனமடைந்து விட்டால் அவையும் எடுத்துக் கொள்ளப்பட்டு, இழப்பீடு வழங்கப் பட வேண்டும். மாநில அரசே நிவாரணத் தொகையை வழங்க வேண்டும்.

நீதிமன்ற உத்தரவு பெற்று 30 நாட் களுக்குள் இது அளிக்கப் பட வேண்டும்.இவ்வளவு வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிந்தால்தானே, பாதிக்கப்பட்ட குழந்தை யும், பெற்றோரும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும்? இவை குறித்து அவர்களுக்குக் கூறப்பட வேண்டும் என்பது இச்சட்டத் தின் கீழ் கட்டாயமாக்கப் பட்டிருக்கிறது.

அதே போல் வழக்கின் விவரம் அவ்வப்போது அவர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.தேசிய/மாநில குழந்தைகள் உரிமை பாது காப்பு ஆணையம் தான் இச்சட்டத்தின் அமலாக்கத்தைக் கண்காணிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு கற்பிக்கப்பட வேண்டியவை

  • சுயகட்டுப்பாடு,தனிமனித ஒழுக்கத்தை பெற்றோர்கள் குழந்தைகளிடம் கற்றுக்கொடுக்க வேண்டும்.
  • பெண் குழந்தைகளிடம் பெற்றோர்கள் அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசவோ, பழகவோ கூடாது மற்றும் அவர்கள் கொடுக்கும் உணவு பொருட்களையும் வாங்கி உண்ணக் கூடாது என்று விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
  • சிறுவர் மற்றும் சிறுமிகள் அறிமுகம் இல்லாதவர் மடியில் அமர்வதோ முத்தம் கொடுப்பது கூடாது.
  • எந்தவொரு நிகழ்வாக இருந்தாலும் குழந்தைகள் பெற்றோர்களிடம் சொல்ல வேண்டும்.
  • அறிமுகம் இல்லாத நபர் மிரட்டுவது போல் நடந்து கொள்ளுதல், ஆசையாக பேசி தன்னிடம் தவறாக நடக்க முயலும் செயல்களை தவிர்க்க குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கவும்.

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கருணையுள்ளம் கொண்ட அம்பத்தூர் எஸ்டேட் காவல் ஆய்வாளர் விஜயராகவன்

320 சென்னை: காவல்துறையினர் என்றால் கடுமை என்பது தான் பொதுவாக பொதுமக்களிடையே  கருத்து நிலவி வருகின்றது. அத்தகைய தவறான கருத்தை, பொய்யாக்க பல்வேறு நல்ல சம்பவங்கள் காவல்துறையில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami