விஷம் அருந்திய பெண்ணை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு சேர்த்து உதவிய பெண் காவலருக்கு பாராட்டு

Admin

விருதுநகர்:  விருதுநகர் மாவட்டம் 15.11.2019 ஏ.முக்குளம் அருகில் உள்ள தேனூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி அரசு பேருந்தில் ஏறி குடும்ப பிரச்சனை காரணமாக விஷமருந்தி உள்ளார்.

அதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அவர்களிடம் உடனடியாக மருத்துவமனைக்கு வண்டியை ஓட்ட சொல்லியுள்ளார்கள். ஆனால் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இருவரும் காரியாபட்டி காவல் நிலையத்திற்கு பேருந்தை ஓட்டிச் சென்று அந்தப் பெண்மணியை இறக்கி விட்டுள்ளார்கள்.

பாதுகாப்பு பணி நிமித்தமாக அனைத்து காவலர்களும் வெளியில் இருந்ததனால் நிலையத்தில் இருந்த ஒரே ஒரு பெண் காவலர் திருமதி தவமணி தாமதமின்றி அவருக்கு முதல் உதவி செய்து தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர வைத்து உடனடியாக காரியாபட்டி அரசு மருத்துவமனை சென்று விஷம் அருந்திய பெண்ணை சிகிச்சைக்கு சேர்த்துள்ளார்.

அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இதனை அறிந்த விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பெருமாள் IPS., அவர்கள் திருமதி. தவமணி அவர்களின் மனிதாபிமானமிக்க பணியை வெகுவாக பாராட்டினார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

தலைமை காவலரை விபத்திலிருந்து காப்பாற்றிய ஊர்காவல் படை காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு

28 சென்னை: சென்னை  திருமுல்லைவாயில் கா.நி. தலைமை காவலர் சௌந்தர், இன்று காலை சுமார் 7.00 மணியளவில் அலுவல் சம்மந்தாக அன்னனூர் ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது, அந்த நேரம் விரைவு ரெயில் வரவே அவரின் bike engine off ஆனது, இதை சற்றும் எதிர் பார்க்காத அவர் திக்கு முக்காடி போய் நிற்க, உடன் இருந்த ஊர்காவல் படையை சேர்ந்த கிருபாகரன் தன் prescience of mind -ஐ use செய்து தலைமை […]

மேலும் செய்திகள்

error: Content is protected !!
Bitnami