திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தை நேய காவல் நிலையம், SP துவக்கி வைத்தார்

Admin

திருவள்ளூர்:  திருவள்ளூர் மாவட்டத்தில் 18/11/2019 இன்று முதல் குழந்தை இனிய காவல் நிலையம் மாவட்ட ஆட்சியர் திருமதி. மகேஸ்வரி IAS அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் மற்றும் இன்டர்நேஷனல் (IJM) என்ற தொண்டு நிறுவனம் இணைந்து திறந்துவைக்கப்பட்டது.

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்கும், பாதுகாப்பதற்கும், காவல் துறை மிக முக்கிய பங்காற்றுகிறது.

குழந்தைகளிடம் தகவல் சேகரிக்கும் பொழுது அவர்களை அணுகும் பொழுது, குழந்தைகளுக்கான சிறப்பு காவல் நிலையத்திலும் அல்லது குழந்தைகள் நேய முறையில் அணுக வலியுறுத்துகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இன்று வரைக்கும் 1269 பெண்கள், காவல் நிலையத்தை உதவிக்காக அணுகியுள்ளனர். அவர்களில், சுமார் 640 பேர் குழந்தைகளுடன் காவல் நிலையத்தை அணுகி உள்ளனர். இதனை அடுத்து மாவட்டத்திலுள்ள 5 மகளிர் காவல் நிலையத்தை தேர்ந்தெடுத்து அவற்றை குழந்தை காவல் நிலையமாக உருவாக்க திட்டமிடப்பட்டது. அதனடிப்படையில் முதல் கட்டமாக திருவள்ளூர், திருத்தணி மற்றும் ஊத்துக்கோட்டையில் இன்று குழந்தை நேய காவல் நிலையம் திறக்கப்படுகிறது.

 

திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்

 

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

கன்னியாக்குமரியில் ஆணவக் கொலை குறித்த விழிப்புணர்வு

75 கன்னியாகுமரி மாவட்டம் 19.11.2019 இன்று கொல்லங்கோடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் கண்ணநாகம் பகுதியில் ஆணவ கொலை தொடர்பாக துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

மேலும் செய்திகள்

error: Content is protected !!
Bitnami