Read Time1 Minute, 4 Second
மதுரை : மதுரை மாவட்டம், பேரையூர் உட்கோட்டத்தில் உள்ள சாப்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற, போக்குவரத்து விழிப்புணர்வில் உட்கோட்ட DSP திரு.மதியழகன்., அவர்கள் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த அறிவுரைகள் வழங்கினார்.
மேலும் ஆசிரியர்களுக்கு தலைக்கவசம் மற்றும் காரில் செல்லும் போது சீட் பெல்ட் அணிவது குறித்த அவசியத்தைப் பற்றியும் எடுத்துக்கூறி ஆலோசனை கூறினார். மேலும் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை