உயரத்தை அதிகரிக்க இளைஞர் செய்த செயலால், தேர்வு மைதானத்தில் இருந்து வெளியேற்றம்

Admin

சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இரண்டாம் நிலை காவல் துறை அதிகாரிகளுக்கு உடற்தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வானது கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்வில் பங்கேற்பதற்காக 400க்கும் மேற்பட்டவர்கள் சேலம் மாவட்டத்திற்கு சென்றிருந்தனர்.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை என்னும் இடத்தை சேர்ந்த தயாநிதி என்ற ஒரு இளைஞரும் இந்தத் தேர்வில் பங்கேற்று இருந்தார்.

தயாநிதிக்கு உயரம் அளவிடும் தேர்வு நடை பெற்றபோது தலையில் ஒரு பகுதியில் மட்டும் சற்று வீங்கி இருப்பது போல் காட்சி அளித்திருக்கிறது . அதனை பார்த்து அதிகாரி ஒருவர் சந்தேகத்துடன் தயாநிதி இடம் விசாரணை மேற்கொண்டுள்ளார். மேலும் தயாநிதியின் தலையை தொட்டு பார்த்தபோது அவர் தலையின் ஒரு பக்கத்தில் பபுள்கம் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதை பயன்படுத்தி உயரம் சற்று அதிகமாக இருப்பது போல் காட்டுவதற்காக இந்த இளைஞர் இந்தவிதமான மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து தயாநிதி இந்த உடல் தகுதி தேர்வில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு

76 காஞ்சிபுரம் : அயோத்தி தீர்ப்பு வருவதை ஒட்டி எந்த ஒரு அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க சுற்றுலாத்தலமான காஞ்சிபுரம் பகுதிகளில் காமாட்சி அம்மன் கோவில் வரதராஜ பெருமாள் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452