சென்னை பெருநகர காவலில் பெண்களின் நலனுக்காக “தோழி அமைப்பு”, காவல் ஆணையாளர் அறிமுகம்

Admin

சென்னை : பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் இடம் தேடி நேரடியாக சென்று, அவர்களுக்கு மன ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் உதவி மற்றும் ஆலோசனைகள் வழங்கிடவும், அவர்கள் தன்னம்பிக்கையுடன் வாழ, பாதுகாப்பு வழங்கிடவும் ஒவ்வொரு அனைத்து மகளிர் காவல் நிலையத்திலிருந்தும் இரண்டு பெண் காவல் ஆனிநர்கள் வீதம் சென்னை பெருநகர காவல்துறையில் உள்ள 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்களிருந்தும் 70 பெண் காவல் ஆளிநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு அதற்குரிய பயிற்சி மற்றும் வழிகாட்டுதல்களை அளித்து மேற்படி பணியில் அவர்களை ஈடுபடுத்த “தோழி” என்ற பெயரிலான திட்டத்தை இன்று 8.11. 2019 காலை 11. 30 மணிக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.A.K.விசுவநாதன் I.P.S,. அவர்கள் சிறப்புரையாற்றி துவக்கி வைத்தார்.

மேற்படி நிகழ்ச்சியில் வடசென்னை காவல் கூடுதல் ஆணையாளர் முனைவர்.திரு.R.தினகரன்.I.P.S அவர்கள், காவல் இணை ஆணையாளர் (மேற்கு) திருமதி.விஜயகுமாரி, I.P.S அவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல் துணை ஆணையாளர் திருமதி.H.ஜெயலட்சுமி T.P.S அவர்கள், காவல் கூடுதல் துணை ஆணையாளர்கள், அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர்கள் மற்றும் ஆளிநர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மனநல மருத்துவர் திருமதி.சாலினி மற்றும் லயோலா கல்லூரி பேராசிரியர் முனைவர் ஆண்ட்ரரூ சேசுராஜ் ஆகியோர் கலந்து கொண்டு தோழி திட்டத்தில் செயல்படும் பெண் காவல் ஆளிநர்களுக்கு உரிய பயிற்சி அளித்தனர்.

நிகழ்ச்சியின் நிறைவாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல் துணை ஆணையாளர் திருமதி.H.ஜெயலட்சுமி. T.P.S அவர்கள் நன்றியுரையாற்றினார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

“மகளிர் நலன்” குறித்த கலந்துரையாடல், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பங்கேற்பு

48 சென்னை : இந்திய வர்த்தக சம்மேளன கூட்டமைப்பு (FICCI) பெண்கள் பிரிவில் (FLO) 6800 பெண் தொழில் முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பு பல்வேறு கருத்தரங்கங்கள், மாநாடுகள், பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் மூலமாக இப்பெண்களின் திறன் மேம்பாட்டை வளர்த்து வருகின்றனர். 5-11-2019 அன்று இந்த அமைப்பு சென்னை கிரவுன் பிளாசா ஓட்டலில் ‘நேருக்கு நேர்’ நிகழ்ச்சி ஒன்றை திருமதி.தீபாளி கோயல் தலைமையில் […]

மேலும் செய்திகள்

Bitnami