தூத்துக்குடியில்  கொலை முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

Admin

தூத்துக்குடி  : தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகையா மகன் நயினார்(34). இவர் 09.10.2019 அன்று ஸ்ரீவைகுண்டம், புதுப்பாலம் அருகே உள்ள கேஸ் குடோன் அருகில் வந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த ஸ்ரீவைகுண்டம், பேரூர், தெற்கு தெருவைச் சேர்ந்த செந்தில் பெருமாள் மகன் மருது என்ற மருதுபாண்டி (24) என்பவர் நயினாரை வழிமறித்து பணம் கேட்டுள்ளார்.

இதற்கு நயினார் மறுத்ததால் ஆத்திரமடைந்த மருது என்ற மருது பாண்டி, நயினாரை அரிவாளால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மருது என்ற மருதுபாண்டி கைது செய்தனர்.

மேற்படி எதிரி மருது என்ற மருதுபாண்டி என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஜோசப் ஜெட்சன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.

பின் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு. சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்கள் எதிரி மருது பாண்டியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஜோசப் ஜெட்சன் மேற்படி எதிரி மருது என்ற மருதுபாண்டியை 05.11.2019 அன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

கண் பார்வையற்ற நபரின் தொலைந்த மொபைல் போனை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைப்பு.

29 திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் அடுத்த செவ்வாப்பேட்டையில் வசித்து வரும் கந்தசாமி என்பவர் கண் பார்வையற்றவர் கடந்த 21/03/2019 அன்று அவரது மொபைல் போனை தவறவிட்டார். இதுகுறித்து செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்களின் தலைமையிலான தனிப்படை போலீசார், cyber crime உதவியுடன் மொபைல் போனை மீட்டு கந்தசாமியிடம் நல்லமுறையில் ஒப்படைக்கப்பட்டது.   திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள் […]

மேலும் செய்திகள்

Bitnami