பாலியல் பலாத்கார குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டணை பெற்று தந்த தேனி காவல்துறையினர்

Admin

தேனி: ராஜதானி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியை சேர்த்த கருப்பசாமி (31) என்பவர் 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை காவல் நிலைத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் திரு.முத்துமணி அவர்கள் தலைமையில் SI திருமதி.ரதிகலா ஆகியோர்கள் POCSO சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கருப்பசாமியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இன்று தேனி மாவட்ட மகிளா விரைவ  நீதிமன்றத்தில் இறுதி விசாரணை முடிவில் நீதிபதி திருமதி.கீதா, ML., அவர்கள் கருப்பசாமியை குற்றவாளி எனக் கூறி 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ₹ 10,000/- அபராதம் கட்ட தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கூறி தீர்ப்பளித்தார்.

மேலும் இவ்வழக்கினை சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர், நீதிமன்ற காவலர் மற்றும் அரசு வழக்குரைஞர் ஆகியோர்களுக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டுகளை தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

தூத்துக்குடியில்  கொலை முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

7 தூத்துக்குடி  : தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகையா மகன் நயினார்(34). இவர் 09.10.2019 அன்று ஸ்ரீவைகுண்டம், புதுப்பாலம் அருகே உள்ள கேஸ் குடோன் அருகில் வந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த ஸ்ரீவைகுண்டம், பேரூர், தெற்கு தெருவைச் சேர்ந்த செந்தில் பெருமாள் மகன் மருது என்ற மருதுபாண்டி (24) என்பவர் நயினாரை வழிமறித்து பணம் கேட்டுள்ளார். இதற்கு நயினார் மறுத்ததால் ஆத்திரமடைந்த மருது என்ற மருது பாண்டி, […]

மேலும் செய்திகள்

Bitnami