கொலை வழக்கில் ஆயுள் தண்டணை பெற்று தந்த தூத்துக்குடி காவல்துறையினர்

Admin

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் காவல் நிலையம் முள்ளக்காடு, தேவிநகரை சேர்ந்தவர் பொன்னுச்சாமி மகன் கணேசன் என்ற சின்னவன்(46) இவரது மனைவி அய்யம்மாள் 37/13. இவர்கள் இருவரும் உப்பள தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர்.

இந்நிலையில் அய்யம்மாளுக்கும் அவருடன் வேலை செய்துவந்த முத்தையாபுரம், முனியசாமிபுரத்தைச் சேர்ந்த தங்கவேலு என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை கணேசன் கண்டித்துள்ளார். அதேபோன்று தங்கவேலுவின் உறவினர்களான பழனிமுருகன்(29), சந்தனமாரி(25), வள்ளிமயில்(45) ஆகியோரும் கண்டித்துள்ளனர்.

இதற்கிடையில் கடந்த 28.06.2013 அன்று அய்யம்மாள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது கணேசன் என்ற சின்னவன் வீட்டிலிருந்த மண்ணெண்ணையை எடுத்து அய்யம்மாள் மீது ஊற்றி தீவைத்து எரித்து கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசன் என்ற சின்னவன், பழனிமுருகன், சந்தனமாரி, வள்ளிமயில் மற்றும் தங்கவேலு ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

06.11.2019 அன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திரு. கௌதமன் குற்றம்சாட்டப்பட்ட கணேசன் என்ற சின்னவனுக்கு ஆயுள் தண்டனையும் ரூபாய் 10,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மற்ற 4 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இவ்வழக்கை விசாரித்த அப்போதய முத்தையாபுரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.ஹரிகரன், தற்போது விருதுநகர், சூலக்கரை காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வருகின்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

சிறப்பாக விசாரணை செய்து குற்றவாளிக்கு தண்டணை பெற்று தந்த விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. நாகலட்சுமி

19 தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் முதலிபட்டியைச் சேர்ந்தவர் பாண்டி(60). இவர் கடந்த 25.01.2019 அன்று முதலிப்பட்டி காட்டுப்பகுதியில் பள்ளி சென்று வந்த மனவளர்ச்சி குன்றிய 14 வயது சிறுமியை கடத்திச் சென்று காட்டுப்பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்து, சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பாண்டியை POCSO சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு […]

மேலும் செய்திகள்

error: Content is protected !!
Bitnami