லலிதா ஜுவல்லரி கொள்ளையன் போலீஸ் காவல் முடிந்ததைத் தொடர்ந்து சிறையில் அடைப்பு

Admin

திருச்சி : திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடைக் கொள்ளையில் சரண் அடைந்த சுரேஷின் போலீஸ் காவல் முடிந்ததைத் தொடர்ந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டான்.

திருச்சி லலிதா ஜுவல்லரியில் கடந்த அக்டோபர் மாதம் 28 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக தேடப்பட்ட முருகன், சுரேஷ் நீதிமன்றத்தில் சரண் அடைந்த நிலையில் கணேசன், மற்றும் ராதாகிருஷ்ணன் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 26 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டன.

இதற்கிடையே இவர்கள் நால்வருக்கும் கடந்த ஜனவரி மாதம் சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த 3 ஆயிரத்து 300 கிராம் தங்க நகைக் கொள்ளையிலும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதில் சுரேஷை இருமுறை போலீசார் காவலில் எடுத்து 2 ஆயிரத்து 600 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் இன்றுடன் சுரேசின் போலீஸ் காவல் முடிவடைந்ததால், ஸ்ரீரங்கம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, வரும் 19 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து போலீசார் சுரேஷை மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

 

 

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

பெண் குழந்தையை கொன்று புதைத்த தந்தை கைது

55 விழுப்புரம்: திருக்கோவிலூர் அருகே பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தையை கொன்று புதைத்த தந்தை கைது.. முதல் குழந்தை பெண்ணாக பிறந்ததால்; தென்பெண்ணை ஆற்றில் கொன்று புதைத்த வரதராஜன் கைது.

மேலும் செய்திகள்

error: Content is protected !!
Bitnami