பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம், ஆயுதப்படை பெண் காவலர் காவல் நிலையத்தில் தஞ்சம்

Admin

மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் அருகே ஆயுதப்படை பெண் காவலர் ஒருவர், இளைஞரை திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். தெற்குதெருவை சேர்ந்த இளைஞர் அருண்பிரசாத் என்பவரும், புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படையில் பெண் காவலராக பணியாற்றும் கண்ணகி என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதற்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், போலீசார் இரு தரப்பினரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பிறகு, இரு தரப்பினரும் சமாதானம் அடைந்ததையடுத்து, பெண் காவலர் வீடு திரும்பினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

மழையில் விழுந்த மரங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்யும் திண்டுக்கல் போலீசார்

88 திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதிகளில் தொடர் மழையினால் நிலச்சரிவு மற்றும் காற்றினால் மரங்கள் போன்றவைகள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இதனை சரி செய்யும் நோக்கில் திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் உயர் திரு. இரா.சக்திவேல் அவர்களின் உத்தரவின் படி தமிழ்நாடு சிறப்பு காவல் படை பேரிடர் மீட்புக்குழு(TNDRF) ஒரு ஆய்வாளர் உட்பட 39 போலீசார்கள் வரவழைக்கப்பட்டு கொடைக்கானல் பகுதியில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மற்றும் காற்றில் சாய்ந்த மரங்கள் போன்றவற்றை […]

மேலும் செய்திகள்

Bitnami