சாலையை சீரமைத்த போக்குவரத்து தலைமைக்காவலர்களை பாராட்டிய சென்னை காவல் ஆணையர்

Admin

சென்னை : எண்ணூர் பகுதியில் பழுதடைந்த சாலையை சீரமைத்த போக்குவரத்து தலைமைக்காவலர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

01.11.2019 காலை சுமார் 7.45 மணியளவில் எண்ணூர் மணலி விரைவுச் சாலையிலிருந்த பள்ளத்தால் வாகன ஓட்டிகள் செல்வதற்கு சிரமமடைவதை பார்த்த எண்ணூர் போக்குவரத்து காவல் ஆளிநர்கள் கான்கீரிட் கலவைகளை கொண்டு மேற்படி பள்ளத்தை சரி செய்து போக்குவரத்து சீராக செல்வதற்கு உதவி புரிந்தனர்.

மேற்படி பணியின் போது சிறப்பாக செயல்பட்டு சாலையிலிருந்த பள்ளத்தை சரி செய்து போக்குவரத்து சீராக செல்வதற்கு ஏற்பாடு செய்த எண்ணூர் போக்குவரத்து காவல் நிலைய தலைமைக்காவலர்கள் திரு.ஏ.வி.ஆர்.வெங்கடேசன் (தா.கா.15338) மற்றும் ஆர்.செந்தில்குமார் (தா.கா.20050) ஆகிய இருவரையும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்,திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

நகை பறிப்பில் ஈடுபட்ட இருவரை கைது செய்த பழனி காவல்துறையினர்

21 திண்டுக்கல் மாவட்டம், பழனியில் பல்வேறு இடங்களில் நகை பறிப்பில் ஈடுபட்ட சிவா(28), பாபு(25) ஆகி இருவரை பழனி காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து 19 பவுன் தங்கநகைகள் மற்றும் நகை பறிப்புக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை செய்கிறார்கள்.

மேலும் செய்திகள்

error: Content is protected !!
Bitnami