போராட்டம் செய்ய முயன்ற நபர்களை கைது செய்ய உதவிய உதவி ஆய்வாளருக்கு சென்னை காவல் ஆணையர் பாராட்டு

Admin

சென்னை : சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்ய முயன்ற நபர்களை கைது செய்ய உதவிய உதவி ஆய்வாளரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

கடந்த 06.10.2019 அன்று மாலை 4.30 மணியளவில் பள்ளிக்கரணை வேளச்சேரி பிரதான சாலை, ஆதி நகர் சந்திப்பு அருகே S-15 சேலையூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கண்காணிப்பு பணியிலிருந்த போது அங்கு சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த நோக்கத்தில் கூடியிருந்த திபெத்தை சார்ந்த நபர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி S–10 பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தார். அதனடிப்படையில் போலீசார் விசாரணை செய்து 36 திபெத்தியர்களை கைது செய்தனர்.

மேற்படி பாதுகாப்பு பணியின் போது சிறப்பாக செயல்பட்டு சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கத்தில் கூடியிருந்த திபெத்தியர்களை கைது செய்ய உதவியாக இருந்த S-15 சேலையூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.அப்துல்முஜீப் என்பவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்,திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் (02.11.2019) இன்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

மதுரை மாநகர காவல்துறையின் முக்கிய அறிவிப்பு

17 மதுரை : வைகை ஆற்றில் அதிகமான நீர் செல்வதால் பொதுமக்களின் நலன் கருதி மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ. கா. ப., அவர்கள், விளக்குத்தூண் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. லோகேஸ்வரி அவர்களுக்கு வைகை ஆற்றை சுற்றிலும் அறிவிப்பு பலகைகள் வைக்கும்படி உத்தரவிட்டார். அவர்கள் உத்தரவுப்படி இன்று காவல் ஆய்வாளர் அறிவிப்பு பலகைகள் வைத்தார். மேலும் வைகை ஆற்றில் யாரும் […]

மேலும் செய்திகள்

error: Content is protected !!
Bitnami