மதுரை காவல்துறையின் பாதுகாப்புடன் சிறப்பாக நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழா

Admin
0 0
Read Time2 Minute, 9 Second

மதுரை : மதுரை மாநகரில் இன்று (30.10.2019) பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள் உத்தரவுப்படி மதுரை மாநகர் முழுவதும் தேவர் ஜெயந்தி பாதுகாப்பு பணிக்காக நான்கு காவல் துணை ஆணையர்கள் (தலைமையிடம், சட்டம் & ஒழுங்கு, குற்றம், போக்குவரத்து) மற்றும் இதர பிரிவுகளான மதுரை மாநகர ஆயுதப்படை பிரிவு, குதிரைப்படை பிரிவு, துப்பறியும் நாய் படை பிரிவு, வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழக்க செய்தல் பிரிவு, தமிழ்நாடு சிறப்பு காவல் படையை சேர்ந்த 5 கம்பெனிகள், ஊர்க்காவல்படை உட்பட 2000 காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் மதுரை மாநகரில் உள்ள 09 சோதனைச்சாவடிகளில் 25 CCTV கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. முக்கியமாக மதுரை மாநகர் கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலையை சுற்றி 5 அதிநவீன சுழலும் கேமிராக்களும் மற்றும் 32 வயர்லெஸ் (Wi-Fi ) கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் மதுரை மாநகரில் உள்ள முக்கிய இடங்களிலும் மற்றும் முக்கிய சந்திப்புகளிலும் 80 CCTV கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கபடி போட்டி: சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை காவலர் கபடி குழு வெற்றி

96 சிவகங்கை : தீபாவளியை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நரியங்காடு கிராமத்தில் 28.10.19ம் தேதி அன்று நடைபெற்ற கபடி போட்டியில் கலந்துகொண்ட சிவகங்கை மாவட்ட […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami