வங்கி கொள்ளையில் ஈடுபட்ட முயன்றோரை கைது செய்த காவல்துறையினருக்கு காவல் ஆணையர் பாராட்டு

Admin

சென்னை: சென்னை சங்கர் நகர் பகுதியில் உள்ள ICICI வங்கி ATM இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்த நபரை கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

கடந்த 22.10.2019 அன்று காலை சுமார் 02.10 மணியளவில் S-6 சங்கர் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொழிச்சலூர் மெயின் ரோடு, அருகில் உள்ள ICICI வங்கி ATM இயந்திரத்தை ஒருவர் கையால் உடைப்பதாக S-6 சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் வந்ததின் பேரில் S-6 சங்கர் நகர் காவல் நிலைய காவல் நிலைய ஆளிநர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அச்சமயம் சம்பவ இடத்தின் அருகில் அம்மன் கோவில் தெருவில் புதிய கட்டிடத்தின் அருகில், சந்தேகப்படும்படியாக படுத்திருந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் பிடிபட்ட நபர் அருள்மணி வ/25, விழுப்புரம் மாவட்டம் என்பதும் அவர் குடிபோதையில் ATM இயந்திரத்தை உடைக்க முயன்றதும் தெரியவந்தது. அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

ATM இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்த நபரை சில மணி நேரத்திலேயே கைது செய்த சங்கர் நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.S.ஜேம்ஸ், ரோந்து வாகன பொறுப்பு உதவி ஆய்வாளர் திரு.E.விநாயகமூர்த்தி, தலைமைக்காவலர் திரு.R.செர்லின்மார்வல் (த.கா.51782), முதல் நிலைக்காவலர் திரு.சதீஷ்குமார் (மு.நி.கா.43118) மற்றும் FOP திரு.J.ஜெயபிரதாப் ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் ( 25.10.2019) நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

செய்தி தொடர்பான மேலும் புகைப்படங்களை காண கிளிக் செய்க

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

திண்டுக்கல் மாவட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூடிய காவல்துறையினர்

28 திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.இரா. சக்திவேல் அவர்களது உத்தரவின்படி 28.10.19 அனைத்து காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை பாதுகாப்பான முறையில் மூடும் பணிகளை காவல்துறையினர் மேற்கொண்டனர். இதன்படி கொடைக்கானல் பண்ணைக்காடு பகுதியிலுள்ள ராம் மஹால் ஊழல்பட்டி மற்றும் ஆலப்பட்டி, தங்கச்சியம்மாபட்டி, சாணார்பட்டி மற்றும் ரெட்டியார்சத்திரம் பகுதியில் ஆபத்தான முறையில் இருந்த ஆழ்துளை கிணறுகளை பொதுமக்கள் உதவியுடன் காவல்துறையினர் மூடினர். மேலும் அப்பகுதியில் […]

மேலும் செய்திகள்

error: Content is protected !!
Bitnami