சாலையை சீரமைத்த போக்குவரத்து காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டு

Admin

சென்னை: சென்னை மழையால் சேதமடைந்த பூந்தமல்லி நெடுஞ்சாலை, (பெங்களூர் விரைவுச்சாலை) வானகரம் சர்வீஸ் சாலையில் வாகன ஓட்டிகளின் வாகனங்கள் ஓட்டுவதற்கு சிரமத்தை அடைந்ததை அறிந்த மதுரவாயல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தலைமையில் போக்குவரத்து நெரிசல் குறைவாக இருக்கும் காலை நேரங்களிலே வந்து மேற்படி சர்வீஸ் சாலையில் கலவைகளை கொட்டி சாலையை சீரமைத்தனர்.

மேலும் போக்குவரத்து காவல் ஆளிநர்களே சாலையை செப்பனிடும் இயந்திரங்களை இயக்கி சாலையை சீரமைத்தனர். மேற்படி போலீசார் கடந்த ஒரு வாரமாக அதிகாலை சுமார் 4.00 மணி அளவில் பணிக்கு வந்து சர்வீஸ் சாலையில் சுமார் 400 மீட்டர் தூரம் வரை போக்குவரத்து சீராக செல்லும் வகையில் சர்வீஸ் சாலையை செப்பனிட்டனர். இதனால் வாகன ஓட்டிகள் மேற்படி சர்வீஸ் சாலையில் சிரமமின்றி பயணம் செய்வதை காணமுடிகிறது. போக்குவரத்து காவல் ஆளிநர்களின் மேற்படி இந்த சிறப்பான பணியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

சர்வீஸ் சாலையை சீரமைத்து போக்குவரத்து சீராக செல்வதற்கு உதவிய மதுரவாயல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.P.S.சுந்தரவதனம், உதவி ஆய்வாளர் திரு.S.கோவிந்தராஜன், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.R.நரசிம்மன், தலைமைக்காவலர் திரு.S.ஆனந்த் (த.கா.43317), தலைமைக்காவலர் திரு.T.ராஜகுமார் (த.கா.36008), தலைமைக்காவலர் திரு.கிருஷ்ணமூர்த்தி (த.கா.36306), முதல் நிலைக்காவலர் திரு.T.வெங்கடாசலம் (மு.நி.கா.35311) ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள்  (25 .10.2019) நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

 

செய்தி தொடர்பான மேலும் புகைப்படங்களை காண கிளிக் செய்க

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

வங்கி கொள்ளையில் ஈடுபட்ட முயன்றோரை கைது செய்த காவல்துறையினருக்கு காவல் ஆணையர் பாராட்டு

42 சென்னை: சென்னை சங்கர் நகர் பகுதியில் உள்ள ICICI வங்கி ATM இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்த நபரை கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். கடந்த 22.10.2019 அன்று காலை சுமார் 02.10 மணியளவில் S-6 சங்கர் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொழிச்சலூர் மெயின் ரோடு, அருகில் உள்ள ICICI வங்கி ATM இயந்திரத்தை ஒருவர் […]

மேலும் செய்திகள்

error: Content is protected !!
Bitnami