வீரமரணம் அடைந்த காவலர்கள் நினைவாக ஆதரவற்ற மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக உணவு வழங்கப்பட்டது

Admin

சென்னை: பணியின் போது வீர மரணமடைந்த காவலர்களை நினைவு படுத்தும் விதத்தில் காவலர் வீர வணக்க நாள் ஆண்டுதோறும் அக்டோபர் 21 ஆம் தேதி அனுசரிக்கப்படுகின்றது. காவலர் வீர வணக்க நாளை அனுசரிக்கும் விதமாகவும், வீரமரணம் அடைந்த காவலர்கள் நினைவாகவும், கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி  வளசரவாக்கம் காவல் உதவி ஆணையர் திரு.மகிமை வீரன் அவர்கள் தலைமையில் நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் இணைந்து டாக்டர் எம். ஜி. ஆர். ஹோம் மற்றும் பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுள்ளோர்கான மேல்நிலை பள்ளியில் பயிலும் 200 மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இப்பள்ளி பாரத ரத்னா உயர்திரு. டாக்டர் MGR அவர்களின் துணைவியார் திருமதி. ஜானகி ராமசந்திரன் அவர்களால் 1990 ல் துவங்கப்பட்டது.

 

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வளசரவாக்கம் காவல் உதவி ஆணையர் திரு.மகிமை வீரன் குழந்தைகளுக்கு உணவு வழங்கி, பின்பு குழந்தைகளுடன் உரையாடினார். காவல்துறையினரை கண்டால் அச்சம் கொள்ளும் குழந்தைகள், அன்புடன் உரையாடிய காவல் உதவி ஆணையர் திரு.மகிமை வீரன் அவர்களை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் காவல் உதவி ஆணையர் திரு.மகிமை வீரன் அவர்களுடைய சிறப்பான சேவையால் அப்பகுதி மக்களின் அன்பை பெற்றுள்ளார் என்பது குறிப்பிட தக்கது.

இந்நிகழ்ச்சியை நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா தேசிய தலைவரும், போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியருமான திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, தென் சென்னை பத்திரிகை செயலாளரும் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபருமான திரு.முகமது மூசா மற்றும் குழுவினர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

மதுரையில் ஆள் கடத்தல் வழக்கில் ரூபாய் 20 லட்சம் கேட்டு முன்னாள் ராணுவ வீரர் மகனை கடத்திய மூன்று நபர்கள் கைது

117 மதுரை: கடந்த 19.10.2019 ம் தேதி இரவு மதுரை மாநகர், வில்லாபுரம் பகுதியில் வசித்துவரும் முன்னாள் இராணுவ வீரர் ராஜீ என்பவரது அலைபேசி எண்ணிற்கு யாரோ அவரது மகன் பார்த்திபன் (M.B.A பட்டதாரி) என்பவரை கடத்திவிட்டதாகவும் அதற்கு பணம் 20 லட்சம் கொடுத்தால்தான் உயிருடன் விடுவதாக கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தனது மகனை மீட்டுத்தரும்படி அவனியாபுரம் காவல் நிலையத்தில் 20.10.2019 – ம் தேதி […]

மேலும் செய்திகள்

error: Content is protected !!
Bitnami