திருநெல்வேலியில் காணாமல் போன சிறுவனை 24 மணிநேரத்தில் கண்டுபிடித்துக் கொடுத்த ஊத்துமலை காவல்துறையினர்

Charles
0 0
Read Time1 Minute, 41 Second

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம்  ஊத்துமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள முத்து கணேசன் மகன் மாதவன்(15) என்பவர் (21.10.2019) திங்கட்கிழமையில் இருந்து வீட்டிற்கு வரவில்லை. பெற்றோர்களும் தேடி எங்கேயும் கிடைக்கவில்லை. பின்பு பெற்றோர் நேற்று அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் மகன் காணவில்லை என புகார் அளித்தனர். புகாரை பெற்று விசாரணை செய்த உதவி ஆய்வாளர் திரு ராஜசேகரன் அவர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு பாக்யராஜ் மற்றும் PC 3314 திரு முப்பிடாதி ஆகியோரை அழைத்துக் கொண்டு அனைத்து காவல் நிலையங்கள் தகவல் தெரிவித்து, ஆலங்குளம்,சுத்தமல்லி, தென்காசி போன்ற பகுதிகளில் சிறுவனை தேடிக்கொண்டிருந்தனர். இறுதியில் சிறுவன் ஆலங்குளம் அருகே உள்ள ரெட்டியார்பட்டி பகுதியில் உள்ள கடம்பநேரியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்பு சிறுவனை காவல் நிலையம் அழைத்து வந்து சிறுவனின் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் ஒப்படைத்தனர். மகனை கண்டுபிடித்து தந்த காவல்துறையினருக்கு பெற்றோர்கள் தங்கள் நன்றிகளை தெரிவித்தனர்.

About Post Author

Charles

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள்

117 மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் கீழ்கண்ட தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. வருகின்ற 24.10.2019 – ந் தேதியன்று […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami