காவலர் வீர வணக்க நாள் காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் தலைமையில் மரியாதை

Admin

தூத்துக்குடி: தூத்துக்குடி காவலர் வீர வணக்க நாளில் அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் இன்று தென்பாகம் காவல் நிலையத்தில் வீரவணக்கம் செலுத்தும் வகையில் சிறப்பு கவாத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் தலைமையில் நடைபெற்றது. இதில் உயிரிழந்த காவல்துறையினர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 21 காவலர்கள் மூன்று முறை துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு தங்களது மரியாதை செலுத்தினர் பின்னர் காவல்துறை உயர் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இந்த வீரவணக்க நாள் நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர்கள் பிரகாஷ், திருச்செந்தூர் பாரத், கோவில்பட்டி ஜெபராஜ், சாத்தான்குளம் பால்துரை, மாவட்ட குற்றப்பிரிவு சுரேஷ் பெலிக்ஸ் பீட்டர், பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் ராகவேந்திரா ரவி, காவல் ஆய்வாளர்கள் மாவட்ட தனிப்பிரிவு பாலமுருகன், தென்பாகம் கிருஷ்ணகுமார், வடபாகம் அருள், மத்தியபாகம் ஜெயப்பிரகாஷ், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையம் வனிதா ,ஆயுதப்படை ஆய்வாளர் மகேஷ் பத்மநாபன், தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு சிசில் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ராஜாமணி, ரவிக்குமார்,ஞானராஜ், ஹென்சன் பால்ராஜ், பெண் உதவி ஆய்வாளர் ரோடாபாய் ஜெயசித்ரா,ஊர்காவல் பெருமாள் மற்றும் ஆயுதப் படை உதவி ஆய்வாளர்கள் சொர்ண மணி. நாகராஜன்,செல்வகுமார், ஈஸ்வரமூர்த்தி, மணிகண்டன், ஜார்ஜ் லிவிங்ஸ்டன், மயிலேறும் பெருமாள், போக்குவரத்து உதவி ஆய்வாளர் வெங்கடேசன், சிவகுமார் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

சேலம் மத்திய சிறையில் பிரட் தயாரித்து விற்பனை செய்யும் கைதிகள்

22 சிறைக் கைதிகளை கொண்டு தொடங்கப்பட்டுள்ள பிரட் தயாரித்து விற்பனை செய்வது, பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சிறை கைதிகளுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தித்தரும் முயற்சியாக சேலம் மத்திய சிறையில் பிரட் தயாரிக்கும் சிறிய அளவிலான தொழிற்சாலை நிறுவப்பட்டுஇ அங்கு கைதிகள் தயாரிக்கும் பிரட்டுகள், சிறைக்கு வெளியில் உள்ள கடையில் விற்கப்பட்டுவருகிறது. மேலும் 2 டன் பிரெட்டுகளை சேலம் அரசு மருத்துவமனைக்கு மாதந்தோறும் வழங்க சிறைத்துறை நிர்வாகம் முடிவுசெய்துள்ளது. அந்த வகையில் […]

மேலும் செய்திகள்

error: Content is protected !!
Bitnami