காவலர் வீரவணக்க தினத்தில் காவல்துறை இயக்குநர் மற்றும் சென்னை காவல் ஆணையர் செய்த காரியம்

Admin

காவலர் வீரவணக்க தினத்தை முன்னிட்டு இரண்டு பெரிய அதிகாரிகளான காவல்துறை இயக்குநர் திரு.திரிபாதி, IPS மற்றும் சென்னை காவல் ஆணையர் திரு.A. K. விஸ்வநாதன்,IPS ஆகியோர் செய்த காரியம் காவலர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டுக்காக உயிர் தியாகம் அளிப்பவர்களுக்கு உண்மையான அஞ்சலி செலுத்துவதோடு மட்டுமல்லாது, அதனையும் கடந்தது அந்த குடும்பத்தினரை சந்தித்து உங்கள் பக்கம் நாங்கள் இருக்கிறோம் என ஆதரவை மனோ ரீதியாக அந்த குடும்பத்துக்கு அளிப்பது என்பது உயரிய குணம் கொண்ட காவல் அதிகாரிகளால் மட்டுமே சாத்தியம் ஆகும். இதன்மூலம் ஒட்டுமொத்த காவலர்களுக்கும் தனது பணியை நிறைவாக செய்யும் எண்ணம் தோன்றும்.

பெரிய பாண்டியன் மகனிடம் பேசுய காவல்துறை இயக்குநர்
தியாகத்தை மதிப்பதுதான் தியாகம் செய்தவருக்கு நாம் செய்யும் உண்மையான வீரவணக்கம். காவல் துறையில் உயிர்நீத்த காவலர்களை நினைவுகூறும் வண்ணம் ஆண்டுதோறும் காவலர் வீரவணக்க நாள் அக்.21 அன்று காவல்துறையில் அனுசரிக்கப்படுகிறது.

காவல் உயர் அதிகாரிகள், ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள், ஆட்சியர்கள் உயர் அலுவலர்கள் காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் அஞ்சலி செலுத்துவார்கள். இந்த ஆண்டு காவல்துறை இயக்குநர் திரு.திரிபாதி அதை மாற்றியுள்ளார்.

நேற்று காவலர் வீரவணக்க நாள் நிகழ்வில் உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தார் வந்திருந்தனர். அவர்களிடம் நேரில் சென்ற காவல்துறை இயக்குநர் அவர்களிடையே உரையாடினார். அவர்களுக்கு தைரியம் சொன்ன அவர் உங்கள் குறைகள் எதுவாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டுச் செல்லுங்கள், அல்லது என்னிடம் வாருங்கள் எப்போதும் உதவ காத்திருக்கிறேன் என்று தெரிவித்தார்.

பெரிய பாண்டியன் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய காவல் ஆணையர்
சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வீரவணக்கநாள் நிகழ்வில் கலந்துக்கொண்டப்பின் வடக்கு மண்டல கூடுதல் ஆணையர், இணை ஆணையர் கபில்குமார், துணை ஆணையர்கள் முத்துசாமி, சுதாகர் ஆகியோருடன் பெரிய பாண்டியன் இல்லத்திற்கு நேரில் சென்றார். அங்கு அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.பெரிய பாண்டியன் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய பின்னர் அவரது குடும்பத்தாரிடம் ஆறுதல் தெரிவித்தார்.

பெரிய பாண்டியன் கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கு சம்பந்தப்பட்ட குற்றவாளி நாதுராம் தலைமையிலான கும்பலைப் பிடிக்க ராஜஸ்தானுக்கு தனிப்படையுடன் சென்றார். உடன் ஆய்வாளர் முனிசேகர் என்பவரும் சென்றிருந்தார்.கொள்ளையர் கிராமத்தில் அதிகாலையில் கொள்ளைகும்பலை பிடிக்கும் முயற்சியில் முனிசேகர் தவறுதலாக சுட்டக்குண்டு பாய்ந்து பெரிய பாண்டியன் உயிரிழந்தார்.

பெரிய பாண்டியனின் வாரிசுகளுக்கும், இன்று வீரவணக்கநாள் நிகழ்வில் பங்கேற்ற மற்ற காவலர்களின் குடும்பத்தாருக்கும், தமிழக காவலர்களுக்கும் உத்வேகம் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

சென்னை ரயில்வே நிலையத்தில் அதிநவீன பாதுகாப்பு ரயில்வே போலீசார் அபாரம்

56 சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ‘ செல்ப் பேலன்ஸ் ஸ்கூட்டர் ‘ புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் நின்றபடி இரயில்வே காவல்துறையினர் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இந்த ஸ்கூட்டர் உதவியுடன் 360 கோணத்தில் சுற்றி, சுற்றி பார்க்க முடியும். மேலும் இந்த ஸ்கூட்டரில் ஒரு மணி நேரத்தில் 4 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும். இது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு பெரிதும் […]

மேலும் செய்திகள்

error: Content is protected !!
Bitnami