Read Time57 Second
திருவண்ணாமலை: பணியில் இருக்கும் போது உயிர்நீத்த காவலர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலையில் மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. திங்களன்று திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் மினி மாரத்தான் போட்டி துவங்கியது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் போட்டியை துவக்கி வைத்தார். தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயிரிழந்த காவலர்களுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. உயிர் இழந்த காவலர்களின் குடும்பத்தினருக்கு உதவிகள் வழங்கப்பட்டது.