காவலர்கள் வீர வணக்க நாள் :சென்னை மாநகரம்

Charles
0 0
Read Time2 Minute, 11 Second

சென்னை: 1959 ம் ஆண்டு அக்டோபர் 21 அன்று காஷ்மீர் லடாக் ஹாட் ஸ்பரிங் பகுதியில்( கடல் மட்டத்திலிருந்து 15000 அடி உயரத்தில்) சீன ராணுவம் மறைந்திருந்து தாக்கியதில் 10 சிஆர்பிஎப் காவலர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்களது தியாகத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21 காவலர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

சென்னை காவல்துறை சார்பில் சென்னை காவல் ஆணையர் திரு.விஸ்வநாதன் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வீரவணக்கநாள் நிகழ்வில் கலந்துக்கொண்டப்பின் வடக்கு மண்டல கூடுதல் ஆணையர், இணை ஆணையர் கபில்குமார், துணை ஆணையர்கள் முத்துசாமி, சுதாகர் ஆகியோருடன் பெரிய பாண்டியன் இல்லத்திற்கு நேரில் சென்றார். அங்கு அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.பெரிய பாண்டியன் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய பின்னர் அவரது குடும்பத்தாரிடம் ஆறுதல் தெரிவித்தார்.

கடந்த ஓராண்டில் மட்டும் 292 காவலர்கள் இந்தியாவில் பணியின் போது வீர மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவின் ஏதேனும் ஒரு இடத்தில் தினசரி ஒரு காவலர், தனது பணியின் போது இன்னுயிரை தியாகம் செய்து வருகிறார்.  இந்த ஆண்டு முதல் அக்டோபர் 21 ம் நாளை மக்களுக்கு தெரியப்படுத்தும் வண்ணம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. தியாகிகள் குடும்பத்தை சேர்ந்தவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டது நெகிழ்ச்சியாக இருந்தது .

 

About Post Author

Charles

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தூத்துக்குடியில் கேமாராக்கள் பொருத்தப்பட்ட கார், DSP துவக்கி வைத்தார்

55 தூத்துக்குடி: தீபாவளி பண்டிகையொட்டி பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் அதிக அளவில் கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர். இதனால், திருட்டு போன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் இருப்பதற்காக தூத்துக்குடி தெற்கு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami