காவலர் வீரவணக்க நாள்-2019 : மதுரை மாவட்டம்

Admin

மதுரை: கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி லடாக் பகுதியில் ஹாட்ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படையினர் 10 பேர் உயிரிழந்தனர். கடல் மட்டத்திலிருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில் வீரமரணம் அடைந்த இந்த காவலர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையிலல் ஆண்டுதோறும் பணியின்போது உயிர் நீர்த்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், காவலர் வீர வணக்க நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில், காவல் துறையில் பணியின் போது தமிழகம் உள்பட நாடு முழுதும் இதுவரை உயிர்நீத்த 473 காவலர்களுக்கும் மரியாதை செலுத்தும் வகையில் இன்று 21.10.2019 -ம் தேதி மதுரை மாநகர் ஆயுதப்படை மைதானத்தில் மதுரை மாநகர காவல்துறை சார்பாக காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப. அவர்களால் உயிர் நீத்தார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

இந்நினைவு நாளில் மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.T.G.வினய் IAS., அவர்கள், மதுரை சரக காவல்துறை துணை தலைவர் திருமதி. ஆனி விஜயா IPS., அவர்கள், மதுரை மாநகர காவல் துணை ஆணையர் தலைமையிடம் திரு.மகேஷ் IPS., அவர்கள் காவல் துணை ஆணையர் சட்டம் & ஒழுங்கு திரு.சசிமோகன் IPS., அவர்கள், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மணிவண்ணன், IPS., மதுரை மாநகர காவல் துணை ஆணையர் (குற்றம்) முனைவர்.திரு.செந்தில்குமார் அவர்கள், காவல் துணை ஆணையர் போக்குவரத்து திரு.சுகுமார் அவர்கள், அவர்கள் மதுரை மாநகர் மற்றும் மதுரை மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

திருவள்ளூர் மாவட்டத்தில் வீரவணக்க நாளையொட்டி காவலர்கள் அஞ்சலி

49 திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் வீரவணக்க நாளையொட்டி காவலர்கள் அஞ்சலி செலுத்தினர். வெயில், பணி, மழை பாராது பணிபுரிந்த காவலர்கள் தம்பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு நினைவஞ்சலி காலை 8 மணிக்கு நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சிலம்பரசன் அவர்கள் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர். […]

மேலும் செய்திகள்

Bitnami