இராமநாதபுரத்தில் காவலர்களுக்கு நீர்த்தார் நினைவு தினம்

Samson

இராமநாதபுரம் 21.10.2019-ம் தேதிஆயுதப்படை வளாகம் மற்றும் கமுதி தனி ஆயுதப்படை மைதானத்தில் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக, காவல் பணியின்போது வீரமரணம் அடைந்தவர்களுக்கு நீர்த்தார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

திரு.ரூபேஷ் குமார் மீணா, இ.கா.ப., காவல்துறை துணைத் தலைவர், இராமநாதபுரம் சரகம் அவர்கள், இராமநாதபுரம் மாவட்டத்தில் பணியின்போது உயிர் தியாகம் செய்தவர்களின் குடும்பத்தினருக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்கள். திரு.வீர ராகவா ராவ், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித் தலைவர், இராமநாதபுரம் மற்றும் திரு.ஓம்பிரகாஷ் மீணா, இ.கா.ப., காவல் கண்காணிப்பாளர், இராமநாதபுரம் மாவட்டம் ஆகியோர் நீர்த்தார் நினைவு நாளை முன்னிட்டு கடந்த 17.10.2019-ஆம் தேதி செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்ட கவிதை மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கினார்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

காவலர் வீரவணக்க நாள் 2019 : சிவகங்கை மாவட்டம்

25 சிவகங்கை: சிவகங்கை மாவட்ட காவல்துறை சார்பாக இன்று காவலர் வீரவணக்க நிகழ்ச்சி மாவட்ட ஆயுதபடையில் உள்ள காவலர் நினைவுத்தூணில் 21 குண்டுகள் முழங்க நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திரு. ஜெயகாந்தன் IAS அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்கள் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆயுதப்படை ஆய்வாளர் திரு. சீமான் அவர்கள் காவலர்களை வழிநடத்தி […]

மேலும் செய்திகள்

Bitnami