+12 மாணவி பலாத்கார வழக்கில் வியாபாரிக்கு 12 ஆண்டு சிறை

Admin

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபி கடுக்காம் பாளையத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (27) பிளாஸ்டிக் வியாபாரி திருமணம் ஆனவர். இவர் தனக்கு சொந்தமான மொபைல் போனில் இருந்து அழைப்பு கொடுத்தார். போனால் அது தவறுதலாக +12 மாணவிக்கு சென்றது. அதன்பின் மாணவியை அடிக்கடி போனில் ஆசை வார்த்தை கூறி பேசியுள்ளார். கடந்த 2018 ஜனவரி 20 ல் மாணவியை போனில் அழைத்து நேரில் வரச் செய்து தனக்கு தெரிந்தவர் வீட்டிற்கு தமிழ்ச்செல்வன் அழைத்துச் சென்றார். அங்கு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கோபி மகளீர் போலீசில் புகார் செய்தனர். டிஎஸ்பி திரு. செல்வம் அவர்கள் தலைமையிலான போலீசார் தமிழ்ச்செல்வத்தை கைது செய்தனர். இந்த வழக்கில் ஈரோடு மகிளா விரைவு நீதிமன்றத்தில் 14.10.2019 அன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி மாலதி அவர்கள் விசாரித்து 12 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

‌பல கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் கைது 59 பவுன் நகை மீட்பு.

229 ஈரோடு:  ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வீடுகளில் தொடர் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர்களை பிடிக்க ஈரோடு மாவட்ட எஸ்பி திரு. சக்தி கணேசன் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் பெயரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா புத்தூர் சுரட்டை பாளையத்தைச் சேர்ந்த வீரமணி (26) நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆண்டி வலசு நாயக்கர் தெரு காமராஜ் (26) திருச்செங்கோடு இறையமங்கலம் காட்டு வேலம்பாளையம் […]

மேலும் செய்திகள்

error: Content is protected !!
Bitnami