132
Read Time1 Minute, 20 Second
காஞ்சிபுரம்: தமிழக காவல்துறையின் 59-வது மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மதுரையில் நடந்தது. இதில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறையின் சார்பில் அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் காவல் அமைச்சுப் பணியாளர்களுக்கான பிரிவில் திரு.தென்னரசு (கண்காணிப்பாளர்) குண்டு எறிதலில் தங்கப்பதக்கமும், இளநிலை உதவியாளர்கள் திரு. குகன் ராஜ் குண்டு எறிதலில் வெண்கல பதக்கமும் மற்றும் நீளம் தாண்டுதல் 100 மீட்டர் ஓட்டம் ஆகியவற்றில் வெள்ளிப் பதக்கமும் , திரு.லெனின்
1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
இவர்கள் இன்று காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கண்ணன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பாலச்சந்திரன் அவர்களும் பரிசு பெற்றவர்களை வாழ்த்தினார்.