சிவகங்கையில் பணமோசடி செய்த இருவரை கைது செய்த குற்றபிரிவு காவல்துறையினர்

Admin

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே கீழப்பூங்குடி பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மற்றும் அவரது மனைவியும் சேர்ந்து வீட்டுடன் சேர்ந்த இடத்தை அடமானமாக வைத்து அதே ஊரை சேர்ந்த பாக்கியம் என்பவரிடம் ரூபாய் 1.75 லட்சம் பணத்தை வீடு கட்டுவதற்காக கடனாக பெற்றனர். மேலும் பாக்கியம் கொடுத்த பணத்தை பலமுறை மாரிமுத்துவிடம் கேட்டதற்கு முன்னுக்குப் பின் முரணாக கூறியும், அடமானம் வைத்த வீட்டை காலி செய்யாமலும் ஏமாற்றி உள்ளார். இதுகுறித்து பாக்கியம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் 06.08.18 அன்று புகார் அளித்தார். இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அளித்த உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 16.10.2019 அன்று மாரிமுத்து மற்றும் மனைவி மீது u/s 406, 420, 120(b) -ன் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

பெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்

17 சென்னை:  சென்னையில் காலமான பெண் ஆய்வாளரின் உடலை, சக காவலர்களுடன் இணைந்து பெண் துணை ஆணையர் சுமந்து சென்ற சம்பவம் நடந்துள்ளது. வண்ணாரப்பேட்டை சிங்காரத்தோட்டம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் ஸ்ரீதேவி. இவர் அதேபகுதியில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். ‌கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதேவிக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த ஸ்ரீதேவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.தகவலறிந்து சென்ற அமைச்சர் […]

மேலும் செய்திகள்

Bitnami