முகமுடி கொள்ளையனை கைது செய்த தஞ்சாவூர் காவல் தனிப்படையினருக்கு பாராட்டு

Admin

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி ரவுண்டானாவில் இருந்து பள்ளி அக்ரஹாரம் பைபாஸ் செல்லும் சாலையில் கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து இரவு இரவு நேரங்களில் வரும் இரு சக்கர வாகனங்களை வழிமறித்து பொதுமக்களை கொடூரமான ஆயுதங்களால் முகமூடி கொள்ளையர்கள் தாக்கி பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்து வந்தனர் .

வல்லம் கோட்ட காவல்துறையினருக்கு பெரும் சவாலாக இருந்த முகமூடி கொள்ளையர்களை பிடிக்க தஞ்சை சரக டிஐஜி லோகநாதன் அவர்களின் உத்தரவின்பேரில் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மகேஸ்வரன் அவர்களின் மேற்பார்வையில் வல்லக்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சீதாராமன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் காவல்உதவி ஆய்வாளர் திரு. சந்திரசேகரன், தலைமை காவலர்கள் திரு. சாமிநாதன், திரு. இளவரசன், திரு. உமா சங்கர் திரு ரமேஷ் குமார் ஆகியோர்களை கொண்ட தனிப்படை முகமூடி கொள்ளையர்களை பிடிக்க அமைக்கப்பட்டது.

அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளர் திரு சந்திரசேகரன் மற்றும் வல்லம் உட்கோட்ட தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடிவந்த நிலையில் 16 10 2019 ஆம் தேதி பிள்ளையார்பட்டி ரவுண்டானா அருகே முகமூடி கொள்ளை கும்பல் தலைவன் ரமேஷ் வயது(28) என்பவரை சுற்றிவளைத்து கைது செய்து அவரிடமிருந்து 10 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்து மேலும் விசாரணை செய்ததில் வல்லம் காவல் நிலைய சரகத்தில் வீடுகள் மற்றும் கடைகள் அவற்றின் பூட்டை உடைத்து கொள்ளையடித்தது மற்றும் பைபாஸில் இரவு நேரங்களில் வரும் காதல் ஜோடிகள் இரண்டு சக்கர வாகனங்களில் வருபவர்களை வழிமறித்து தாக்கி பத்துக்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் வல்லம் காவல் உதவி ஆய்வாளர் மேற்படி எதிரியை கைது செய்தும் அவரிடம் இருந்தும் எதிரியின் மனைவியிடம் இருந்தும் நகைகளை கைப்பற்றி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் நகைகளுடன் தப்பிச்சென்ற 3 கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

 

நமது சிறப்பு நிருபர்

குடந்தை . ப.சரவணன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

பாலியல் வன்கொடுமை குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய துணை ஆணையர்

43 திருப்பூர்:  திருப்பூர் மாநகர துணை ஆணையர் திருமதி.உமா (IPS) அவர்கள் இடுவம்பாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாலை போக்குவரத்து மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பற்றி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

மேலும் செய்திகள்

error: Content is protected !!
Bitnami