திருப்பூரில் தொழிலாளி கொல்லப்பட்ட வழக்கில் அவரது தாய் மற்றும் சகோதரர் கைது

Admin

திருப்பூர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் பாண்டியன் இவர் குடும்பத்தை பிரிந்து வந்து திருப்பூரில் தனது தாயுடன் தங்கி வேலை செய்து வந்தார் கடந்த 3 மாதமாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு இருந்துள்ளார் இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் வீட்டில் பிணமாகக கிடந்துள்ளார்.

இதனை அடுத்து பிணத்தை கை பற்றிய மாநகர மத்திய காவல் நிலைய போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர் இந்நிலையில் சம்பவத்தன்று பாண்டியன் தனது தாய் முருகாயிடம் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்து அடித்துள்ளார்.  இதனால் ஆத்திரம் அடைந்த அவரது சகோதரர் மற்றும் தாய் முருகாயி கத்தி மற்றும் கட்டையால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார் என்பது தெரிய வந்தது எனவே மத்திய காவல் நிலைய தனிப்படையினர் அவர்களை கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

5 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்த அரக்கோணம் காவல்துறையினர்

21 வேலூர்: வேலூர் அரக்கோணத்தில் இன்று காலை 5 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.  அரக்கோணம் காவல்  கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார், IPS அவர்களின் உத்தரவின்படி, அரக்கோணம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மனோகர் அறிவுறுத்தலின்படிம், அரக்கோணம் டவுன் காவல் ஆய்வாளர் திரு.முத்துராமலிங்கம் தலைமையிலான காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.பழனிசாமி, திரு.தேவபிரகாஷம் மற்றும் திரு. விஸ்வநாதன் உள்ளிட்டோர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது பெங்களூரிலிருந்து அரக்கோணம் வழியாக கடத்தி வரப்பட்ட சுமார் 2 […]

மேலும் செய்திகள்

error: Content is protected !!
Bitnami