14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர்களை கைது செய்த சிவகங்கை மாவட்ட போலீசார்

Admin

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம்  மானாமதுரை அருகே ஆலம் பச்சேரி பகுதியைச் சேர்ந்த விஷ்வா என்பவர் 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் தன்னை காதலிக்குமாறு பலமுறை வற்புறுத்தியுள்ளார். இதனை சிறுமி மறுக்கவே அவரைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை வீடியோவாக எடுத்து தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். மேற்படி வீடியோவை காட்டி விஷ்வாவின் நண்பர்கள் அச்சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது குறித்து அச்சிறுமி 10.10.2019 அன்று அளித்த புகாரின் பேரில் மானாமதுரை போலீசார் u/s 342, 354(c),366(A), 376(3), 509 IPC & 6,12,14(1) of POCSO Act & 67(A) ,67(B) of IT Act-ன்  கீழ் வழக்குப்பதிந்து கவியரசன், அருண்குமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

சமயநல்லூர் போக்குவரத்து காவல் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

23 மதுரை: மதுரை மாவட்டம், சமயநல்லூர் கோட்டம், சமயநல்லூர் நெடுஞ்சாலை பிரிவு போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.மணிமாறன் அவர்கள் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் துண்டுப்பிரசுரம் வழங்கிய நிகழ்ச்சி. வாடிப்பட்டி மற்றும் சமயநல்லூர் பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கும் சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பற்றிய துண்டு பிரசுரம் கொடுத்து காவல் ஆய்வாளர் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.  இதனைப் பார்த்த பொதுமக்களும், வாகன ஓட்டுனர்களும் காவல்துறையினரை வெகுவாக பாராட்டினர். […]

மேலும் செய்திகள்

Bitnami