மரணத்தை விளைவிக்கக்கூடிய அபாயகரமான மூன்று வாள் வைத்திருந்த இரண்டு நபர்கள் கைது

Admin
0 0
Read Time2 Minute, 13 Second

மதுரை : மதுரை  B3- தெப்பக்குளம் (ச.ஒ) காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சிவராமகிருஷ்ணன் மற்றும் தலைமை காவலர் திரு.சீனிவாசன் காவலர் திரு.அன்பு ஆகியோர்கள் 08.10.2019 ந் தேதி மதுரை காமராஜர் சாலை, 16 கால் மண்டபம் முன்பு வாகன சோதனை செய்துகொண்டிருந்த போது ஆட்டோவில் வந்த நபர்கள் காவலர்களை பார்த்தவுடன் தப்பி ஓட முயன்றவர்களை பிடித்து விசாரணை செய்ததில் மதுரை பழைய குயவர் பாளையம், ஜானகி மாதவ அய்யர் தெருவைச் சேர்ந்த கத்தி ஆனந்த் என்ற ஆனந்தகுமார் (25) மற்றும் இசக்கி முத்து (23) என்பது தெரியவந்தது மேற்படி ஆட்டோவை சோதனை செய்தபோது அதில் அபாயகரமான மூன்று வாள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

காவல் ஆய்வாளர் திரு. கணேசன் அவர்கள் இருவரிடமும் விசாரணை செய்தபோது முன் விரோதம் காரணமாகவும் பழிக்குப்பழிவாங்கும் எண்ணத்தில் ஏழு நபர்களை கொலை செய்வதற்காக வாளுடன் வந்ததாகவும் தெரிவித்தனர் எனவே அவர்கள் இருவரையும் காவல் ஆய்வாளர் கைது செய்து அவர்களிடமிருந்து மூன்று வாள்கள் மற்றும் ஒரு ஆட்டோவையும் பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினார்.

மேலும் ஏழு உயிர்களை கொலை செய்வதற்கு முன்பே அவற்றை தடுத்து கொலைக்குற்றம் நடைபெறாமல் தடுத்து திறம்பட செயல்பட்ட காவல் ஆய்வாளர், காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள் பாராட்டினார்.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சென்னையில் இரண்டு நாட்களுக்கு நேர வாரியாக போக்குவரத்து மாற்றம்

55 சென்னை: சென்னையில் நாளை பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரின் வருகையையொட்டி, நாளையும், நாளை மறுநாளும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சென்னை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami