தொடர் திருட்டில் ஈடுபட்ட நபரை கைது செய்த திண்டுக்கல் காவல்துறையினர்

Admin

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரவுண்ட்ரோடு புதூர் பகுதியில் வசிப்பவர் கவிதா (30). இவர் கடந்த 01.09.19ஆம் தேதி உறவினர் திருமணத்திற்காக சென்றுவிட்ட நிலையில் மீண்டும் 07.09.19ஆம் தேதி வீட்டிற்கு வந்து பார்க்கும்பொழுது கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த 7 பவுன் செயின் காணாமல் போயிருந்தது, இதுகுறித்து அவர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரினை பதிவு செய்து காவல் உதவி ஆய்வாளர்  திரு மகேஷ் அவர்கள் தலைமையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.வீரபாண்டியன், திரு.நல்லதம்பி,HC- 737 திரு.ஜார்ஜ் எட்வர்ட், HC-1695 திரு.ராதாகிருஷ்ணன், HC- 786 திரு.முகமது அலி மற்றும் Gr.I -755 திரு. விஸ்வாசம் ஜெயராஜ் ஆகியோர் கொண்ட குற்றத்தடுப்பு போலீசாரும் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் தேடி வந்த நிலையில் திருட்டு வழக்கில் தொடர்புடையவன் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருப்பது தெரியவந்து விரைந்து சென்ற குற்றத்தடுப்பு போலீசார் அவனை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் வீட்டை உடைத்து திருடியது தஞ்சாவூரை சேர்ந்த முகமது உசேன் (26) என்பதும் இவர் மீது பல மாவட்டங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து 7 பவுன் தங்க செயின் பறிமுதல் செய்யப்பட்டது. 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

ஆபத்தை ஏற்படுத்தும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மதுரை காவல் ஆணையர் எச்சரிக்கை

16 மதுரை:  மதுரை காவல் ஆணையர் பொதுமக்களின் நலன் கருதி இன்று (10.10.2019) உத்தரவு பிறப்பித்துள்ளார்.  மதுரை மாநகரில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையிலும், ஆபத்தை ஏற்படுத்தும்படியும், அதிக ஒலிப்பான் எழுப்பியும் மற்றும் அபாயகரமாக இரு சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொள்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கும்படியும், அவ்வாறு பயணம் மேற்கொள்பவர்களின் வாகனத்தையும் உடனடியாக பறிமுதல் செய்யும்படியும் மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளார். […]

மேலும் செய்திகள்

Bitnami