திருப்பதி பிரம்மோற்சவ விழா, திருப்பதி SP தலைமையில் பாதுகாப்பான விழாவாக பக்தர்கள் பெருமிதம்

Admin

திருப்பதி: பிரம்மோற்சவ விழா ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருப்பதி வேங்கடேசப் பெருமாள் கோயிலில் நடைபெறும். திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவம் கடந்த 1,400 ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக வரலாற்று சுவடுகள் கூறுகின்றன.

இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவ விழா கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி துவங்கப்பட்டது. பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தங்க கருட சேவை அக்டோபர் மாதம் 4-ம் தேதி நடைபெற்றது. இதில் சுமார் 4 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர். இத்திருவிழா வரும் அக்டோபர் மாதம் 8-ம் தேதியுடன் நிறைவு பெறுகின்றது.

நாடு முழுவதுமிருந்து பக்தர்கள் பலரும் இந்த பிரம்மோற்சவ விழாவில் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கு திருப்பதி காவல் கண்காணிப்பாளர் திரு. அன்பு ராஜன் தலைமையிலான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். லட்சக்கணக்கான பக்தர்களை, காவல்துறையினர் சிறப்பான முறையில் கையாண்ட விதம் அங்கு கூடிய பொதுமக்களின் பாராட்டை பெற்றது. இப்பாதுகாப்பு பணியில் 80 காவல் துணை கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பில் 5000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருப்பதி காவல் கண்காணிப்பாளர் திரு. அன்பு ராஜன் அறிவுறுத்தலின் பேரில் பாதுகாப்பு நடவடிக்கைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளும், திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் இருந்து பக்தர்களை காப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் காவல்துறையினர் திறம்பட செயலாற்றினர்.

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

சென்னையில் போக்குவரத்து காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

63 சென்னை: போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு ஆயுத பூஜையை முன்னிட்டு, திருஷ்டி பூசணிக்காய் உடைப்பதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து, விபத்துகள் ஏற்படுகின்றன.எனவே, பொதுமக்கள்சாலைகளில் பூசணிக்காயை உடைக்க வேண்டாம். பாதுகாப்பான முறையில், தங்களது பூஜைகளை செய்ய வேண்டும்.மேலும், சாலையில் பூசணிக்காய் உடைத்து விபத்து ஏற்பட்டால், அதற்கு காரணமானோர் மீது, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது

மேலும் செய்திகள்

Bitnami