மதுரையில் 3.700 கி.கி. கஞ்சா விற்பனை செய்த நான்கு நபர்கள் கைது

Admin

மதுரை: மதுரையில் B3-தெப்பக்குளம் ச&ஒ காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சிவராமகிருஷ்ணன் மதுரை டவுன், புது ராம்நாடு ரோடு, தமிழன் தெரு அருகில் நேற்று 05.10.2019-ம் தேதி ரோந்து காவலர்களுடன் ரோந்து பணியில் இருந்தபோது மதுரை கீரைத்துறையைச் சேர்ந்த ஜோதிமாரி 19/19 த/பெ.கண்ணன் என்பவர் கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே அவரை கைது செய்து அவரிடமிருந்து 1.100 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. B3-தெப்பகுளம் ச&ஒ காவல் நிலைய  உதவி ஆய்வாளர் திரு.கார்த்திக் மதுரை டவுன், அனுப்பானடி பேருந்து நிறுத்தம் அருகில் ரோந்து காவலர்களுடன் ரோந்து பணியில் இருந்தபோது மதுரை புது ராம்நாடு ரோடு பகுதியைச் சேர்ந்த பாண்டி முனீஸ்வரன் 22/19, த/பெ.நாகராஜ் என்பவர் கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவரை கைது செய்து அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

மேலும் V2- அவனியாபுரம் ச&ஒ காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.ராஜ்குமார் மதுரை டவுன், அவனியாபுரம், பெரியசாமி ரோட்டின் அருகில் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது TN64 P3322 YAMAHA R15 என்ற இருசக்கர வாகனத்தில் வந்த கிஷோர்சர்மா 20/19, த/பெ.தங்கராஜ், அவனியாபுரம், விஸ்வா 19/19,த/பெ.பாக்கியராஜ், அவனியாபுரம், ஆகிய இருவரும் சேர்ந்து கஞ்சா விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவர்கள் இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 2.400 கிலோ கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய TN64 P3322 YAMAHA R15 என்ற இருசக்கர வாகனமும் கைப்பற்றப்பட்டது.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

காவலர் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இலவச உடற்தகுதிக்காண தேர்வு பயிற்சி

8 இராமநாதபுரம்: 2019-ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த இரண்டாம் நிலை காவலர் (ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினம்), சிறைக்காவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, உடற்தகுதிக்காண தேர்வில் எளிதில் தேர்ச்சி பெறும் வகையில், இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட விளையாட்டுதுறை இணைந்து வருகின்ற 09.10.2019-ம் தேதி முதல் இராமநாதபுரம் ஆயுதப்படையில் இலவச பயிற்சி முகாம் நடத்த உள்ளது. மேலும், […]

மேலும் செய்திகள்

Bitnami