60
Read Time1 Minute, 3 Second
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் 05.10.2019 அம்பை உட்கோட்ட காவல் துணை காவல் கண்காணிப்பாளர் செல்வி.சுபாஷினி மற்றும் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் இணைந்து கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களையும், நான்கு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் அணிந்து வந்தவர்களையும் உற்சாகப்படுத்தும் விதத்தில் அவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி பாராட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதேபோல் உங்கள் உற்றார் உறவினர்கள், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் எடுத்துக்கூறி ஹெல்மெட், சீட் பெல்ட் அணிய சொல்லுங்கள் என ஆலோசனை வழங்கினார்.