கன்னியாகுமரியில் தொடர் செயின் மற்றும் வாகனங்கள் திருட்டில் ஈடுப்பட்டவர்களை காவல்துறையினர் கைது

Samson

கன்னியாகுமரி மாவட்டம்: கொல்லங்கோடு, நித்திரைவிளை, புதுக்கடை, உள்ளிட்ட பல பகுதிகளில் சில நாட்களாக மோட்டார் சைக்கிளில் வந்து பெண்களிடம் சங்கிலி பறிப்பு சம்பவம் நடைபெற்று வந்தது, குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. N.ஸ்ரீநாத் IPS அவர்கள் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கொல்லங்கோடு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. அந்தோணியம்மாள் தலைமையில் தனிப்படை உதவி ஆய்வாளர் திரு. ஜான் போஸ்கோ மற்றும் காவலர்கள் சகிதம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகபடும் படியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அதில் இருவரும் கேரளமாநிலம் பூந்துறையை சேர்ந்த சாஜன்(26), மற்றும் ரோய்(23) என்பதும் இவர்கள் பல பகுதிகளில் பல பெண்களிடம் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. விசாரணையில் இவர்கள் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என தெரிய வந்தது. உடனே அவர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில்அடைத்தார். அவர்களிடமிருந்து 38 பவுன் தங்க நகைகள் கைப்பற்றபட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

மக்கள் நலனுக்கு கம்பம் காவல்துறையினர் செய்த காரியம், பொதுமக்கள் பாராட்டு

24 தேனி மாவட்டம்: தேனி மாவட்டம், கம்பம் நகர் அதனை சுற்றியுள்ள நெடுஞ்சாலை பகுதிகளில் விபத்து ஏற்படும் இடங்களை கண்டறிந்து கம்பம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.தட்சிணாமூர்த்தி அவர்கள் தலைமையிலான போலீசார்களின் முயற்சியால் சாலை ஓரங்களில் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் விபத்து பகுதியை இரவு நேரங்களிலும் தெரிந்துகொண்டு விபத்தை தடுக்கும் விதமாக விபத்து பகுதி, DANGER என்று பிளக்ஸ் போர்டுகள் வைத்து அதில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.

மேலும் செய்திகள்

error: Content is protected !!
Bitnami