50
Read Time1 Minute, 4 Second
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் 04.10.2019 அன்று நித்திரவிளை பகுதியை சேர்ந்தவர் ரதீஸ்(24) இவரிடம் கண்ணநாகம் பகுதியில் ஒருவர் லிப்ட் கேட்டு பைக்கை நிறுத்தி உள்ளார். பைக்கை ரதீஸ் நிறுத்தினர் அப்போது திடீரென சட்டைப்பையில் இருந்த செல்போனை திருடிவிட்டு ஓடினார். பொதுமக்கள் பிடித்து கொல்லங்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசராணையில் அந்த நபர் கேரளத்தை சேர்ந்த அல்பீர்(34) என்றும் இது போல பலபேரிடம் கைவரிசை காட்டியது தெரியவந்தது. ரதீஸ்சின் புகாரின் படி கொல்லங்கோடு போலீசார் அல்பீரை கைது செய்து u/s 379 r/w 511 IPC படி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.