வாட்ஸ் ஆப்பில் தவறான தகவல் பரப்பியவர் கைது – தூத்துக்குடி டி.எஸ்.பி. பிரகாஷ் அதிரடி நடவடிக்கை.

Admin

தூத்துக்குடி:  தூத்துக்குடி வண்ணார் தெரு, மேல சண்முகபுரதைச் சேர்ந்த செந்தூர் பாண்டி மகன் வேலுமயில் என்பவர் குடிபோதையில், நேற்று (04.10.2019) மாலை 5.45 மணியளவில் தனது மனைவி மாரிச்செல்வியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.

இதன் விளைவாக தனது இரு சக்கர வாகனத்தை தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாமோதர நகர் (பீங்கான் ஆபீஸ்) சந்திப்பு அருகில் தீயிட்டு எரித்துள்ளார்.01

இது சம்பந்தமாக வேலு மயில் மகள் நித்யஸ்ரீ என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் வேலுமயில் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரு சக்கர வாகத்தை தீயிட்டு எரித்த இந்த நிகழ்வை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து “தூத்துக்குடியில் ஹெல்மெட் போடாத வாகனத்திற்கு அதிக அபராதம் விதித்ததால் மனமுடைந்த சண்முகபுரத்தைச் சேர்ந்த வேலு என்பவர் தன் இருசக்கர வாகனத்தை தூத்துக்குடி பீங்கான் ஆபீஸ் சந்திப்பு அருகில் தீ வைத்து எரித்ததாக தகவல் என” காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வாட்ஸ் ஆப்பில் தவறான தகவல் பரப்பிய தூத்துக்குடி , அழகேசம் மாரியப்பன் மகன் அருண் விஜய் காந்தி (25) என்பவரை டி.எஸ்.பி பிரகாஷ் அவர்களின் உத்தரவின் பேரில் தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மேற்பார்வையில் எஸ். ஐ. ஞானராஜன் வழக்குப் பதிவு செய்து கைது செய்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

கன்னியாகுமரியில் செல்போன் திருடியவர் கைது

39 கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் 04.10.2019 அன்று நித்திரவிளை பகுதியை சேர்ந்தவர் ரதீஸ்(24) இவரிடம் கண்ணநாகம் பகுதியில் ஒருவர் லிப்ட் கேட்டு பைக்கை நிறுத்தி உள்ளார். பைக்கை ரதீஸ் நிறுத்தினர் அப்போது திடீரென சட்டைப்பையில் இருந்த செல்போனை திருடிவிட்டு ஓடினார். பொதுமக்கள் பிடித்து கொல்லங்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசராணையில் அந்த நபர் கேரளத்தை சேர்ந்த அல்பீர்(34) என்றும் இது போல பலபேரிடம் கைவரிசை காட்டியது தெரியவந்தது. ரதீஸ்சின் புகாரின் […]

மேலும் செய்திகள்

Bitnami