Tue. Sep 17th, 2019

தூத்துக்குடியில் வழிப்பறியில் ஈடுபட முயன்ற 7 பேர் கைது

12 Views

தூத்துக்குடி: வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ரவிகுமார் தலைமையிலான போலீசார் 26.08.2019 அன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது முத்துகிருஷ்ணாபுரம் மேற்குப்பகுதி இடுகாட்டிற்கு அருகில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த கிருஷ்ணராஜபுரம் மூன்றாவது தெருவைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் ஜெபராஜ்(23), கிருஷ்ணராஜபுரம் ஆறாவது தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் சக்திவேல்(27), சுந்தரவேல்புரம் முதல் தெருவைச் சேர்ந்த அமல்ராஜ் மகன் சரவணன்(21), முத்துகிருஷ்ணாபுரம் ஆறாவது தெருவைச் சேர்ந்த ரவி மகன் பால சுந்தர்(23), கிருஷ்ணராஜபுரம் எட்டாவது தெருவைச் சேர்ந்த மாரிமுத்து மகன் மதன் குமார்(19), எஸ்.எஸ் மாணிக்கபுரம் பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை மகன் மகாராஜன்(24) மற்றும் மகாராஜனின் சகோதரர் கார்த்திக்(22) ஆகியோரை விசாரணை செய்ததில் வழிப்பறியில் ஈடுபடுவதற்காக கொடிய ஆயுதங்கள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது

இதனையடுத்து உதவி ஆய்வாளர் திரு. ரவிகுமார் அளித்த புகாரின் பேரில் வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து ஜெபராஜ், சக்திவேல், சரவணன், பால சுந்தர், மதன் குமார், மகராஜன் மற்றும் கார்த்திக் ஆகியோரை கைது செய்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்