Mon. Sep 16th, 2019

தேனியில் குற்றங்களை தடுக்கும் விதமாக SP அவர்கள் புறக்காவல் நிலையத்தை திறந்துவைத்தார்

14 Views

தேனி: மாவட்டம்  26.08.2019 கூடலூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருநாக்கமுத்தன்பட்டி கிராமத்தில் குற்றங்களை தடுக்கும் விதமாக மாவட்ட *காவல் கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன்* அவர்களின் உத்தரவின் பேரில் உத்தமபாளையம் உட்கோட்ட *DSP திரு.சின்னகண்ணு, காவல் ஆய்வாளர் திரு. சுரேஷ்குமார், SI திரு. திவான் மைதீன்* ஆகியோர்கள் மற்றும் காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து காவல் ஆளினர்களின் சீரிய முயற்சியால் பயன்பாட்டில் இல்லாத பழைய ஊராட்சி மன்ற கட்டிடத்தை கிராம அனைத்து சமுதாய பொதுமக்கள் உதவியுடன் புதுப்பித்து புறக்காவல் நிலையம் துவங்கப்பட்டது. இந்த புறக்காவல் நிலையம் (24X7) என்ற முறையில் *சிறப்பு சார்பு ஆய்வாளர்* அவர்கள் தலைமையில் *ஒரு காவலர் மற்றும் இருசக்கர வாகன ரோந்து காவலர்* ஆகியோர்கள் சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள். மேலும் இக்கட்டிடம் திறப்பதற்கு உதவியாக இருந்த *SSI திரு.அன்பழகன்* அவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டுகளை தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!