Mon. Sep 16th, 2019

சென்னையில் ஏடிஎம் மையங்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி பொதுமக்களின் பணத்தை அபகரித்து வந்த கும்பலை காவல்துறையினர் கைது

15 Views

சென்னை: ஏடிஎம் மையங்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி பொதுமக்களின் பணத்தை அபகரித்து வந்த கும்பலை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். சென்னை அயனாவரம் கான்ஸ்டபிள் ரோட்டிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட ATM மையத்தில் பொருத்தப்பட்டிருந்த Skimmer கருவி மற்றும் ரகசிய கேமராவையும், கண்டறிந்து ATMஐ பராமரிக்கும் தனியார் நிறுவன ஊழியரான திரு.யுகராஜ் என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்களிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளை விரைந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அ.கா.விசுவநாதன், இ.கா.ப. அவர்கள் உத்தரவுப்படி மத்தியகுற்றப்பிரிவில் தனிப்படை அமைக்கப்பட்டது. மேற்படி தனிப்படை போலீசார் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு சென்று தீவிர புலன் விசாரணை மேற்கொண்டும், வங்கி வாடிக்கையாளர்களின் பணம் முறைகேடாக எடுக்கப்பட்ட பல்வேறு வங்கி ATM மையங்கள் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பொருத்தப்பட்டிருந்த CCTV கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டும், வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கு விவரங்களை ஆராய்ந்ததிலிருந்தும், எதிரி இர்ஃபான், ஆ/வ 34, த/பெ.அப்துல் ரகுமான், கொளத்தூர், சென்னை- 99, என்பவரும், அவரது கூட்டாளிகளும் தமிழ் நாட்டிலுள்ள பல்வேறு வங்கி ATM மையங்களில் Skimmer கருவி மற்றும் ரகசிய கேமராக்களை பொருத்தி வங்கி வாடிக்கையாளர்களின் டெபிட், கிரெடிட் கார்டு விவரங்களை திருடி அதைக்கொண்டு போலி ATM கார்டுகளை தயார் செய்து, ATM மையங்களில் லட்சக்கணக்கில் பணத்தை எடுத்தது தெரியவந்தது. அதே போலி ATM கார்டுகளை அவர்களது கூட்டாளிகளான அல்லா பக்கஷ் ஆ/வ 37 த/பெ. பஷீர் ஹகமது, ஏழுகிணறு, சென்னை-01 மற்றும் அப்துல் ஹாதி, ஆ/வ 46, த/பெ. நூர்முகமது, பதூர், மாங்காடு, சென்னை-122 ஆகியோரது பெயர்களில் போலியாக ஆரம்பிக்கப்பட்ட கம்பெனிக்குரிய (EDC) Swiping Machine மற்றும் அவர்கள் மூலமாக கொண்டுவரப்பட்ட வேறு கம்பெனிகளுக்குரிய (EDC) Swiping Machine-களைப் பயன்படுத்தி லட்சக்கணக்கில் வங்கி வாடிக்கையாளர்களின் பணத்தை திருடி மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

அதன்பேரில், மேற்படி எதிரிகள் 3 பேரையும் கடந்த 23.07.2019 அன்று கைது செய்தனர். இதனை தொடர்ந்து மேற்படி வழக்கில் தொடர்புடைய இம்ரான், பசீருல்லா செரீப், ஷாம் (எ) சரவணன், புருஷோத், அஜ்மல் (எ) இப்ராகிம், அப்துல் மஜித், மொய்தீன் சல்மான் ஆகியோரையும்கைது செய்தனர் அவர்களிடமிருந்த Skimmer, Encoder, laptop, EDC Machine, போலி ATM Card, ரொக்கம் ரூ3,82,600/-, குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட Cell Phone மற்றும் 3 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 10 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த மத்தியகுற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் திரு.சி.ஈஸ்வரமூர்த்தி, இ.கா.ப அவர்களின் அறிவுரையின் பேரில், மத்தியகுற்றப்பிரவு துணை ஆணையாளர் திருமதி.G.நாகஜோதி அவர்களின் நேரடி கண்காணிப்பில் மத்திய குற்றப்பிரிவு, கூடுதல் துணை ஆணையாளர், திரு.K.சரவணக்குமார் அவர்களின் தலைமையில், உதவி ஆணையாளர்கள் திரு.D.ஆரோக்கிய ரவீந்திரன் திரு. ஜி.வேல்முருகன், ஆய்வாளர்கள் திருமதி.R.செல்வராணி, திரு.ஆர்.சுரேஷ்குமார், ஆர்.புஷ்பராஜ், உதவி ஆய்வாளர்கள் திரு.அசோக்தாமஸ்துரை, திருமதி.கே.ப்ரியா, திரு.தேவராஜ், திரு.அகிலன், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.கோபு, தலைமைக்காவலர்கள் திரு.ஜெகன் (த.கா.எண்.19917) திரு.சண்முகம், (த.கா.எண்.26801) திரு.மகேஷ் (த.கா.எண்.43849) முதல் நிலைக்காவலர் திரு.சதீஷ், (மு.நி.கா.எண்.26678) மற்றும் காவலர்கள் திரு.சதீஷ்குமார், (கா.எண்.29871), திரு.ராஜ்குமார், (கா.எண்.30663), திரு.சரவணன் (கா.எண்.40894), திரு.மாரிமுத்து (கா.எண்.44506) திரு.தியாகராஜன் (கா.எண்.50857), திரு.அன்சர் (கா.எண்.47213) ஆகியோர் கொண்ட தனிப்படை காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் (20.08.2019) அன்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!