Sun. Aug 18th, 2019

தேனியில் தோஷம் கழிப்பதாக கூறி நகைகளை பறித்து ஆசாமியை காவல்துறையினர் கைது

23 Views

தேனி: அல்லிநகரம் பகுதியில் குடியிருக்கும் *வேல்முருகன் (சாமியார்)* என்பவரிம் சென்னை, குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த *லோஹியா (52)* என்பவர் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு முன்பு தனது மகள் திருமணம் தொடர்பாக ஜாதகம் பார்க்க வந்தபோது லோஹியாவின் மனைவிக்கு ஆபத்து உள்ளதாகவும் உடனடியாக தோஷம் கழித்து அதை மாற்றிவிட வேண்டும் என்றும் அதற்கு 10,00,000/- செலவாகும் என்று கூறிய நிலையில் லோஹியா பணம்  5,30,000/-யை வேல்முருகனின் வங்கிக் கணக்கில் செலுத்தினார். மேலும் மாங்கல்ய தோஷம் கழிக்க சுமார் 10 சவரன் தாலிச் செயின் மற்றும் மோதிரங்கள் போன்ற தங்க நகைகளை* கொடுத்து ஏமாந்த நிலையில் பாதிக்கப்பட்ட லோஹியாவும் அவரது அண்ணன் சூர்யாவும் பணத்தை திரும்ப கேட்டு சென்ற நிலையில் இருவரையும் அடித்து கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் அளித்த புகாரின் பேரில் தேனி மாவட்ட குற்றப்பிரிவில் *காவல் ஆய்வாளர் திருமதி.ராமலட்சுமி* அவர்கள் தலைமையில் *SIதிரு.ரவிராஜ்* ஆகியோர்கள் பிரிவு 406, 420, 506 (i) IPCன் கீழ் வழக்கு பதிவு செய்து வேல்முருகனை கைது செய்தனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!