Sun. Aug 18th, 2019

திருச்சியில் பெண் எரித்து கொலை காவல்துறையினர் விசாரணை

21 Views

திருச்சி: திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே வனத்துறைக்கு சொந்தமான பகுதியில், பெண் முற்றிலும் எரிந்த நிலையிம் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து சிறுகனூர் காவல்நிலைய காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததின் பேரில், திருச்சி காவல்துறை சரக துணைத் தலைவர் (டிஐஜி) பாலகிருஷ்ணன், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக், லால்குடி டிஎஸ்பி ராஜ்குமார் உள்ளிட்டோர் வந்து அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தி, கொலையான பெண்ணின் சடலத்தினை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

30 வயது மதிக்கதக்க பெண் உடல் எரிந்த நிலையில், அவர் அணிந்திருந்த மஞ்சள் நிற சேலை பாதி எரிந்தும், கை விரல்களில் சில்வர் மோதிரங்கள் மற்றும் கழுத்தில் அம்மன் படம் பொருந்திய பித்தளை டாலரும், கால் விரல்களில் மெட்டியும் அணிந்திருந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக லால்குடி டிஎஸ்பி தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து கொலையான பெண் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், கொலைக்கான காரணம் என்ன கோணத்தில் தனிப்படையினர் விசாரணை நடத்தி, கொலை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முயன்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!